பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 43 – நன்றி கொஞ்சம் நின்ற துணை சிறிது. தன்னந் தனியே பாடிக்கொண்டு தமிழ் வளர்த்த அப் புதுவைக் கு யி லி ன் வறுமைப் பாட்டையும்கூட நாம் காண விரும்பவில்லை. முடிவு என்ன ? அவர் வறுமையும் இலக்கியமானது ; அவர் மனமும் சாம்பிப் போனது. இறுதியில்......! தம்மைத்தாமே தூக்கி நிறுத்திக் கொள்ளத் தெரியாத அத் தமிழ் நெஞ்சம், தம் குடும்பத்தையும் தெருவில் விட்டு விட்டுத் தாம் புரந்த தமிழையும் இடைநிறுத்தித், தம்மையும் உலகுக்காக்கிவிட்டுப் போய்ச் சேர்ந்தது. இனி, அவர் மறைவை எண்ணிக் காத் திருந்தவரெல்லாரும், அவர் புகழ்பாடித் தம் வயிறு வளர்க் கத் தொடங்கி விட்டனர். நாம் அவரை மறக்க முடியாத அழுங்கலால் அலங்கல் சூட்டி வணங்குகின்ருேம். இனி, பாரதிதாசனுக்கு-தமிழ்ப் பெரும் பாவலனுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் பல உள. பாரதிதாசன மதித்துப் பாராட்டிய தமிழர் அரசேற்று நடத்தும் காலம் இது. அவர் பாங்கிலும் நம் பாங்கிலும் நாம் அவர்க்குச் செலுத்த வேண்டிய நன்றிக் கடன்கள் ஏராளம்? அவற்றை யெல்லாம் நாம் செய்தாகல் வேண்டும். உயிருடன் இருக் கையில் பேணத் தவறிய நாம், அவர் இறந்த பின்னுவது அக்கடன்களைச் செய்து நம் நன்றியுணர்வை அத் தலைமகனுக் குக் காட்டுதல் வேண்டும். தம் வறுமை நிலையால் குறைக்காசிற்கும், கறைக் கை களுக்கும் விற்ற அவர் நூல்கள் எல்லாவற்றையும் விலை கொடுத்து வாங்கி, அவற்றைப் பொதுவுடைமையாக்குதல் வேண்டும். இதுவரை வெளிவந்துள்ளனவும் வெளி வரா தனவுமான அவ்ர் எழுத்துகளைத் தக்காரைக் கொண் டு பதிப்பித்து, அடக்க விலையில் தருதல் வேண்டும். அவரு டைய சிறந்த பாடல் தொகுப்பை எல்லா இந்திய மொழி களிலும் அச்சிட்டு அடக்க விலைக்குத் தரும்படி தில்லி அரசினர் சார்பில் உள்ள இலக்கிய வெளியீட்டுக் கழகத்தைக் கேட்டுச் செயற்படுத்தல் வேண்டும். இவ் வழி அவர் கருத்துகளை