உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 44 — எல்லா மக்களும் அறியும் வாய்ப்பு ஏற்படும். அவர் நூல் களில் சிறந்தனவாகிய குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம் மூன்றில் ஒன்றுக்காகிலும் தில்லி இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் பரிசைப் பெற்றுத் தருதல் வேண்டும். ஏறத்தாழ ஐம்பதினுயிர உருபா கடல்ை முழுகிப் போக விருக்கும் பாவேந்தர் வாழ்ந்த வீட்டை விலக்கு வாங்கி, அதை அரசுடைமை ஆக்கித் தமிழ் நினைக்கும் நெஞ்சங்க ளெல்லாம் நாள்தோறும் வந்து கண்டு மகிழ்ந்து போகும் நினைவு நிலையமாக அதை மாற்றுதல் வேண்டும். பாவேந் தரின் கைப்படிகள், கையாண்ட பொருள்கள், பயன்படுத்திய இருக்கைகள், மிசைப் பலகைகள், புகைப்படங்கள், மடல்கள் முதலியவற்றை அவர் குடும்பத்தாரிடமிருந்து வி லே க் கு வாங்கி, அந்த நினைவு நிலையத்தில் வைத்துப் பே ணு த ல் வேண்டும். மேலும் அங்கு வந்து போவார் அவ்வப்பொழுது வாங்கிச் செல்வதற்கென்று அவர் நூ ல் க ள் முழுமையும் புகைப்படங்களும் அடங்கிய விற்பனை நிலையமொன்றையும் அந் நினைவு நிலையத்தோடு இணைத்தல் வேண்டும். இதனால் அந் நிலையத்துக்கு வரும் வருமானத்தை அந் நிலைய வளர்ச் சிக்கே பயன்படுத்துதல் வேண்டும். இவ்வகையில் மேடுை களில் மக்கள் போற்றும் அறிஞர்க்காகவுள்ள தேசிய நிலை யங்களே முன்னுேக்காக வைத்துக் கொண்டு செயற்படுதல் வேண்டும், - இவற்றையெல்லாம் செய்ய இப்பொழுதுள்ள தமிழக அரசால்தான் முடியும். மேலே கூறிய அனைத்தும் எந்தப் பொது அமைப்பாலும் செய்யவியலாத-அரசு ஒன்ருலேயே செய்ய முடிகின்ற ஆக்கங்கள். தமிழுக்கு ஆக்கமும் தமிழர்க்கு ஊக்கமும் தருகின்ற நோக்கமுடைய அரசாக இத் தமிழக அரசு இயங்குகின்ற காரணம் பற்றி, இவற்றை அன் பு வேண்டுகோளாக இவ்வரசினர்.முன்வைக்கின்ருேம். புறத்தே தமிழுக்கு நலஞ்செய்வது போல அகத்தே கேடு செய்யும் தமிழ்க் கேடர்களால் இத்தகைய நலன்களைச் செய்தல்