பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 45 — முடியாது. மேலும் நூல்வெளியீட்டுத் துறையிலும், அரசினர் பொதுப் பணித்துறையிலும் இதுநாள்வரை தமிழர்க்கு எவ்வகையான ஆக்கமும் செய்யப் பெறவில்லை. பேராயக் கட்சி ஆட்சியிலிருந்த காலத்தெல்லாம் இத்துறைகள் பார்ப் பனர் நலம் நாடும் துறைகளாகவே இருந்து வந்துள்ளன. அதன் விளைவாகப் பாரதியாரின் தகுதிறம் அளவுக்கு மீறி உயர்த்தப்பட்டுள்ளது. பாரதியார் ஒரு பார்ப்பனர் என்ற காரணத்துக்காக உலகப் பாவலர்' என்ற போலிப் பெயர் சூட்டியும் பாராட்டப் பெற்றுள்ளார். ஆனல், உண்மையில் பாரதியார் எந்த அளவுக்குப் பாராட்டப் பெற்றுள்ளாரோ அதைவிடப் பாரதிதாசன் பாரா ட் ட ப் பெற்றிருக்க வேண்டும். தமிழரின் அறியாத துயிலுக்கும், பார்ப்பனரின் அறிதுயிலுக்கும் இஃது ஒர் எடுத்துக்காட்டு. பாரதி ஓர் உணர்வுப் பாவலர் (ஆவேசக்கவி); பாரதி தாசன் ஓர் இயற்கைப் பாவலர். பாரதியார் அன்றிருந்த தேசியச் சூழ்நிலையையும், சமய எழுச்சியையும் தம் உணர்வில் வெளிப்படுத்தினர். பாரதிதாசன் தாம் கண்ட புறநிலைகளைத் தாம் உணர்ந்த அகநிலையொடு பொருத்தி, ஏற்றத்தாழ்வு களைச் சாடினர். பாரதியார் பாடியது சமயம், அரசியல். பாரதிதாசன் பாடியது இயற்கை, குமுகாயம். இயற்கை சமயத்திற்கும், குமுகாயம் அரசியலுக்கும் அடிப்படை. இவ் விரு பாவலர்களும் இவ்விரு நிலைகளைப் பற்றிப் பாடினும் பாரதிதாசன் பாரதியினும் விஞ்சிய பாவலன். பாரதியையே அறிமுகப்படுத்தியவர் பாரதிதாசன்தான். கல்கி கூட்டங் கள் பாரதியை ஒரு பாவலர் என்றே ஒப்புக்கொள்ளாமல் புறக்கணிப்பாக இருந்தபொழுது, "பார தி ஓர் உலகப் பாவலன் என்று தமிழால் பாடிய அப் பாவலனுக்கு உண்மை யான நன்றி காட்டினர் பாரதிதாசன். அதன்பின் திறத்தால் உணரப்படாமல் இருந்த பாரதியாரைப் பா شي.. غنية: . ندة " . بين جي இனத்தால் உணர்ந்து பாராட்டினர்; போற் 。・・。 மேல் கொண்டுபோய் வைத்துச் சீன னை அச்சுறுத் தமிழறியா வடநாட்டாரும் தமிழறியும் பெருமாள்

  • 總 ள்களாக