உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 46 – நடமாடித்திரியும் இங்குள்ள பார்ப்பனர்களின் பேச்சைக் கேட்டுப் பாரதியை விண்ணுக்குத் தூக்கினர். தூக்கினதோ டன்றிப், பாரதிக்குப்பின் தமிழகத்தில் எவனும் புலவனில்லை’ என்று சாக்கத்து கத்தித் திரிகின்றனர். மண்டைப் புழு நெளியும் இத் தான்தோன்றியர்தம் ஒலம் தமிழ்நாட்டி விருந்து வெளிவருவதே நமக்கு இழுக்கு. எனவே இச் சூழலில் பாரதிக்கு இனத்தால் கொடுக்கப்பெற்ற அப் பெருமை பாரதிதாசனுக்குத் திறத்தால் .ெ கா டு க் க ப்.ெ ப று த ல் வேண்டும் என்று தமிழக அரசைப் பல்லாற்ருனும் வேண்டிக் கூறிக்கொள்கின்ருேம். இனி, தூங்கிக் கிடந்த தமிழர்தம் வாழ்வுநிலை நோக்கி, ஏங்கிக் கிடந்த பாவலர்தம் பெரிய குடும்பம், இ க் கா ல் வறுமைநிலை தாங்கிக்கிடக்கின்றது. கடன் சுமை தாளாது துடிக்கின்ற அவர் தலைமகன், தன் ஒரே மகனின் துவள்கின்ற உடல் தாளாது பெருமூச்செறியும் அம் முதியதாய்-பாவேந் தரின் இல்லத்தரசி, அவரின் குன்றிய நிலைக்கு ஏங்கிக் கண்ணிர் வடிக்கின்ற மூன்று பெண்கள்! தமிழ்நாட்டின் குடும்பங்களுக் கெல்லாம் விளக்கேற்றி வைத்த அத் தண்டமிழ்ப் பாவல னின் குடும்பம், இன்று இரு ண் ட வீட்டில் அடைக்கலன் புகுந்து கிடக்கின்றது. அரிமாவென அவர் உலாவிய அவ்வீடு உண்மையிலேயே ஒளியிழந்து கிடக்கின்றது. தமிழ் பாடிய அப் பாவலனின் பெயரப் பிள்ளைகள் வ ற் றிய தோலும், வதங்கிய கன்னமும், வாடிய வயிறுமாக இன்று அவலம் பாடித்திரிகின்றனர். ஆருக்கும் பணியாத நெஞ்சுரனும், அவலத்திற்குத் துவளாத தமிழ்ச் செம்மாப்பும் கொண்ட திருமகன்-அரிமாவுக்குப் பிறந்த வேங்கை-மன்னர் மன்னன் இன்று துயரப் புயலால் துவட்டி யெடுக்கப்பெற்ற பழைய ஒலப் பாயைப் போல் ஒளி மழுங்கிக் கிடக்கின்ருர். தமிழ் வளர்த்த குடும்பம் இன்று தமிழர்களால் புரக்கப் பெருது தீயால் வாடியிருக்கின்றது. பீடு நிரம்பிய அக் ன்று பெருமை குன்றிக் கிடக்கின்றது.