பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 47 — இந்நிலையில் தமிழர்களாகிய நாம் செய்யக் கடவது என்ன? பாரதிதாசன் மன்றங்கள் நினைவு விழா கொண்டாடு கின்றன. பாரதிதாசன் எங்கள் புலவன், பாவலர்க்கு வேந் தன் என்று பன்னிப் பன்னிப் பேசுகின்ருேம் நாம். தமிழ் நிலம் உலகிலேயே நன்றி காட்டும் நிலம் என்ற நிலைபோய், நன்றி மறந்த நிலம் என்று கீழ்மைப்பட்டு விட்டது. தமிழர் நன்றியுள்ளவர் என்ற நிலை போய், நன்றி கொன்றவர் என்ற நிலையேற்பட்டு விட்டது. நன்றி கொன்ருர்க்கு உய்வுண்டா? இல்லை என்கிறது தமிழ் மறை. இங்கிருக்கும் நான்கு கோடித் தமிழர்களில் ஒரு நாற்பதாயிரம் தமிழர்களாவது அ வ ர் பாடல்களைப் படித்திருக்க மாட்டார்களா? அப் பாடல்களின் உள்ளுணர்வால் தாக்கப் பெற்றிருக்கமாட்டார்களா? அப் பாடல்களால் தங்கள் உள்ளங்களில் மறைந்து கிடந்த தமிழு ணர்வு கீண்டப் பெற்றுப் புத்துணர்வு பெற்றிருக்க மாட்டார் களா? அவ்வாறு புத்துணர்வு பெற்றுப் பு து வாழ் க் ைக வாழ்ந்து கொண்டிருக்க மாட்டார்களா? அவர்களை நோக்கி நாம் கேட்கின்ருேம். உங்களுக்குப் புத்துணர்வு ஊட்டிய அப் பாவேந்தனுக்கு-உங்கள் மண்ணுள்ளத்தைப் பொன் னுள்ளம் ஆ க் கி ய புலவனுக்கு-சாம்பிக் கிடந்த தமிழ்க் குமுகாயத்தை வீறு கொண்டெழச் செய்ய அப் பாப்புலிக்கு -'உரம் பெய்த செந் தமிழ்க்கு ஒன்றிங்கு நேர்ந்ததென உரைக்கக் கேட்டு, நரம்பெல்லாம் இரும்பாக்கி நனவெல்லாம் உணர்வாக்கி வைத்த, அப் பாட்டு மறவனுக்கு-சிறுத் தையே வெளியில் வா! எலி என உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலி எனச் செயல் செய்யப் புறப் படு வெளியில் சிங்க இளைஞனே திருப்பு முகம் திற விழி. . . . . . மொழிப்பற் றெங்கே விழிப்புற்றெழுக!' என்று தட்டியெழுப்பிய தானத் தனவனுக்கு-நீங்கள் செய்யப் போவது என்ன? உங்களில் ஆளுக்கு ஒருவர் ஓர் உருபா தந்து உதவினும் புயலிற்பட்ட கலம் போலாகும் அப் புலவனின் குடும்பம், வயலிற்பட்ட மழையென வளம் பொங்கி எழுமே! தாக்கும் வறுமையால் விடும் அவர்தம் ஏக்கப் பெருமூச்சுக்குத் தமிழினம் ஆற்றும் தலையாய கடமையன்ருே இது? . . . . . . .