உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 48 — செல்வம் மிகுந்த நாடு தமிழ்நாடு. பாண்டியன் அளந்த முத்து, சேரன் நிறுத்த யானை மருப்பு, சோழன் அமைத்த நெற்களஞ்சியம் என்றெல்லாம் இலக்கியம் பாடிய தமிழ்ப் புலவர் வழி வந்த இத் தண்டமிழ்ப் பாவலர்க்கு நாம் கடமை செய்யத் தவறிளுேம். பெண்டிர் நலம் பற்றித் தூது, உலா, மடல், வாயில் என்று பலப்பல காமக் கழி நிலை நூல்களைப் பாடுவதையே தம் தொழிலாகக் .ெ கா ன் ட இழிநிலைப் பாவலர்கள் போல் அன்றி, குமுகாயப் புரட்சிக்கே வித்திட்ட இப் புதுமைப் புலவனுக்கு-தமிழ் அன்னைக்குத் தலைமகளுகி அளப்பறிய தொண்டாற்றிய இப் புலவர் மணிக்கு-நாம் இதையும் செய்யாமற் போவோமானல் ந ம க் கு எதிர் காலத்தே வரும் இழிவைத் தாங்கிக் கொள்ள நெஞ்சு போதாது. ஆகவே, அரசினர் பாடாற்றும் வினைகளை அவர் புறத்தே விடுத்து, நாம் செய்து முடிக்கின்ற வினையாற்றலில் நாட் டத்தை வைப்போம். ஆங்காங்கே உள்ள தமிழ்க் கழகங்கள், மன்றங்கள், கல்வியமைப்புகள், புலவர் குழுக்கள், தமிழ் அன்பர்கள் எல்லாரும் தம் தம் சார்பில் தங்களால் இயன்ற அளவு பொருள் திரட்டிப் புதுவையில் உழன்று கொண்டி ருக்கும் பாவேந்தர்தம் குடும்பத்திற்கு விடுத்தல் வேண்டும் என்று பல்லாற்ருனும் வேண்டிக் கொள்கின்ருேம். தாங்கள் தொகுக்கின்ற பொருளை தமிழ்த்திரு. பழநியம்மாள், மேற் பார்வை, மன்னர் மன்னன், 95 பெருமாள் கோயில் தெரு, புதுவை-1-என்ற முகவரிக்கு விடுத்து விட்டு, அத் தொகுப்புப் பட்டியலைத் தென்மொழிக்கு வி டு க்க வேண்டுகின்ருேம். பட்டியல் தென்மொழியில் வரும். அனுப்பப் பெறுகையில் “இது பாவேந்தருக்குச் செய்யும் நன்றிக்கடன், தென்மொழி அன்பர்கள் சார்பில் விடுக்கப் பெற்றது” என்றும் குறிப்பிடும் படி கேட்டுக் கொள்கின்ருேம். ஒவ்வொரு நாளும் எத்த னையோ துறைகளில் உருபாக்களைச் செலவு செய்கின்ருேம்.இவ் வழி நாம் அளவில் ஒவ்வொருவரும் குறைந்தது ஒர் உருபா செலவிடுவதால் நம் நிலைக்குக் குறைவும் ஏற்பட்டு விடாது;