பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. புதுவையில் பாவேந்தருடன் 3 . தொடர்பு (சேலத்திலிருந்து, புதுச்சேரிக்குப் பாவேந்தர் பாரதி தாசன முதல் முறையாகப் பார்க்கச் சென்ற நிகழ்ச்சியை யடுத்து, நான்காண்டுகள் கழித்து 1954-இல் ஆசிரியர் மீண்டும் அதே புதுவைக்கு அரசுப் பணியின் பொருட்டு வந்த பொழுது, பாவேந்தரிடம் சென்று, அக்கால் சேல் ங் கல்லூரிப் பேராசிரியராக விருந்த தம் ஆசிரியர், மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் எழுதிக் கொடுத்தனுப் பிய கீழ்வரும் பாராட்டுப் பாடலைக் காட்டிஞர். - ‘துரை மாணிக்கம் இன்பத்தூடு துள்ளும் இன்ப அருவிபோன்றே வரை மாணிக்கம் ஆகிப் பல்ல வகையால் உணர்ச்சிப் பாக்களாக உரைமாணிக்கக் கொத்தின் கற்கள் - உள்ளத் தழகாய்ப் பட்டை தீர்ந்து திரைமாணிக்கம் என்னத்தேறித் தென்னுடெங்கும் திகழ்க மன்ளுே” - இப்பாடலையும் ஆசிரியரின் பிறபாடல்களையும் கண்டு பெருமகிழ்ச்சியுற்ற பாவேந்தர், தம் மகன் மன்னர் மன்னனை அழைத்து அவரிடம், தம்பி, இந்தாப்பா, இவரை எங்கெங் கேயோ தேடினேமே! இங்க வந்து நிற்கிருரு. இவரை என் றைக்கும் கைவிட்டு விடாதே. கடைசி வரை உன்னேடேயே வைத்துக்கொள்!” என்று உணர்ச்சி பொங்கக் கூறினர். அக்கால் ஆசிரியர் பாவேந்தரிடம் தாம் நான்காண்டுகளுக்கு முன்பு ஒருநாள் பாவியங்களுடன் வந்திருந்த செய்தியை நினைவூட்டிக்கூறி, அக்கால் எழுதிய பாடலையும் பாடிக் காட்டினர். பாவேந்தர் அப்பாடலைக் கேட்டு மிகவும்