உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 60-R -- வருந்தியவராயும், இப்பாடலால் மகிழ்ந்தவராயும், 'அப் பொழுது வேறு மாதிரி நிலையில் இருந்திருப்பேன்; அந் நிகழ்ச்சியை மறந்துவிடு’ என்று அன்பொழுக ஆசிரியர்க்கு ஆறுதல் கூறிஞர். அதற்குப் பின்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் இவை .. ஆசிரியர் அதைப் பற்றிக் கொய்யாக்கனி, முன் னுரையில் குறிப்பிட்டிருப்பதாவது...) 1954-ஆம் ஆண்டு, புதுச்சேரியில் அஞ்சல் எழுத்த ளுகப் பணியேற்றேன். பாவேந்தர் பாரதிதாசனரின் நெருங் கிய நட்பு கிடைத்தது. அன்ருடம் அலுவல் முடிந்ததும் பாவேந்தர் வீட்டில்தான் என்னைப் பார்க்கலாம். அக்கால் அவருடைய உண்மையான உள்ளத்தன்பையும் நம்பிக்கை யும் நிறையப் பெற்றிருந்தேன். . பாவேந்தர் ந. ட் பு நெருங்கியிருந்தபொழுது, 1955 தொடக்கத்தில் கண்ணதாசனின் தென்றல் இதழில் இலக் கியப் போட்டி ஒன்று அறிவிக்கப்பெற்றிருந்தது. அ தி ல் தேர்ந்தெடுக்கப் பெறும் பாவியத்திற்கு ஆயிரம் உருபா பரிசு என்றும் அறிவித்திருந்தார்கள். அப் போட்டிக்குத் தேர் வாளராகப் பாவேந்தர் அமர்த்தப் பெற்றிருந்தார். அந்தப் போட்டி அறிவிப்பு வெளிவந்தவுடன் ஒருநாள் மாலை, பாவேந்தர் என்னிடம் போட்டி வந்திருக்கின்றது. தெரியுமா?’ என்று கேட்டார். தெரியும் என்றேன். நான் தான் தலைவன்; நீ எழுது: உனக்குத்தான் பரிசு; வேறு யாருக்குத் தரப்போகிறேன், நான் என்று முத்தாய்ப்பு வைத்துவிட்டு, 'இதுவரை ஏதாவது பாவியம் எழுதி வைத் திருக்கிருயா'என்ருர். நான் உடனே, ஆம் என்று கூறி விட்டு, மல்லிகை, பூக்காரி இரண்டையும் பள்ளி மாணவப் பருவத்திலேயே எழுதி வைத்திருப்பதாகவும், அவற்றுள் பூக்காரியைப் போட்டிக்கு அனுப்பலாம் என்றும் அவரிடம் தயங்கித் தயங்கிக் கூறினேன். o உடனே, அதை எடுத்துக் கொண்டு வா’ எ ன் று கட்டளை போட்டார். அதன் பின்னர்ப் பூக்காரியின் பழந்