உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 60-o- — தாள் தொகுதி மீண்டும் சரி செய்யப் பெற்றது:சில திருத் தங்களுடன் அன்பர்களேக் கொண்டு, ஒரு கிழமைக்குள் செவ்விதாகப் படியெடுக்கப் பெற்றது. அதில் தலையாய திருத்தமாகப், பூக்காரி என்று அதற்கிட்டிருந்த பெயரைக் -கொய்யாக்கனி என்று மாற்றம் செய்தேன்.......... ... ...... கொய்யாக்கனி'யை நான் போட்டிக்கு அணியப்படுத்த முற்பட்டதற்கு முன்னை ஒருநாள், பாவேந்தரின் தொடக்கக் கால நூல்களில், வரைதுறையின்றி வடசொற்கள் பயின்றி ருந்த நிலையினை அவர்க்குக் கொள்கையுணர்வுடன் சுட்டிக் காட்டி, ஐயா, இந்நிலை, இப்பொழுதுள்ள நம் கொள்கைக்கு மாருனதாகவிருக்கின்றதே; தாங்கள் இசைவளிப்பீர்களா யின், இவ் வடசொற்களைக் களைந்துவிட்டு, அவற்றிற்குப் பகரமாகப் பொருத்தமான தூய தமிழ்ச் சொற்களே, நான் பெய்துவிட முடியுமே, செய்யட்டுமா?’ என்று கேட்டேன். அவ் விளுவைச் சற்றும் எதிர்பாராத பாவேந்தர், உடனே, இல்லை; வேண்டாம்! நான் எப்படியெப்படி இருந்து வளர்ந்து இப்படிப்பட்ட நிலைக்கு வந்திருக்கின்றேன், என்று மற்றவர் கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா?’ என்ருர். அவருடைய விடை எனக்கு மிகவும் சரியாக, இயற்கையை யொட்டிய தாகப்பட்டது. - அறிவுணர்வு மிகக் கலந்த பாடல்கள் அறநூலாகி விடும் கற்பனையுணர்வு மிகக் கலந்த பாடல்களே பாவியங் கள்! எனவே, அன்று வெளிப்படுத்திய உணர்வு முளைகளை, அப்படியே மக்கட்கு வடிவப்படுத்திக் காட்டினேன். கொய் யாக் கனியில் இடம் பெற்றிருந்த பற்பல வடசொற்கள் களையப்பெறவில்லை. உணர்வு மாரு த, இயற்கையழகு கெடாத - வகையில் ஆங்காங்கே. சில வடசொற்கள் - அறியாப் பருவத்து அறிவுணர்வு மழுக்கச் சொல்லாட்சிகள்முதலியன உண்டு. அவற்றை அப்படியே விட்டு விட்டேன் பாட்டமைப்பில் கூட அதிகம் கை வைக்க வில்லை. ஒவியமைதி கருதி ஓரிரு சீர், தளைகள் செப்பம் செய்யப்பெற்றன.