உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 60.ஊ - இனி, இவ்வாறு திருத்தப் பெற்ற படி, பாவேந்தரின் முன் பார்வைக்கு வைக்கப் பெற்றது. பாவேந்தருக்கு அன்றிருந்த வினையழுத்தத்தில், இன்று, நாளேயென்ருகி, ஒரு நாள் மாலை 6 மணியளவில், கொய்யாக்கனி படிப்பதற்கு எடுத்துக் கொள்ளப் பெற்றது. பாவேந்தர் முழங்கையை மிசையின் மேல் ஊன்றியவராய், சுருட்டை மாறி மாறிப் புகைத்தவராய், மூன்று மணி நேரம் ஈடுபட்டு அதனைப் படித்து முடித்தார். இறுதியில், இங்கொன்றும் அங் கொன்றுமாக, அதைத் திருத்தி, இந்தாப்பா, இதை யெடுத்துக் கொண்டு போய்ப் போட்டிக்கென்று விடுத்து விடு’ என்று கூறினர். அத்துடன், மூன்று மணி நேரம் ஆடாமல், அசையாமல், இடை விடாமல் முழங்கையை ஊன்றிப் படித்த வருத்தம் வெளிப்படுமாறு "கையெல்லாம் வலிக்குதப்பா' என்று, கையை உதறிக்கொண்டே கூறினர். அந்த அருங்காட்சி இன்னமும் என் உள்ளத்தில் பசுமையாக நிழலாடிக் கொண்டிருக்கிறது. பிறகு, ஏதோ ஒரு காரணத்தால், போட்டிக்குப் பாவேந்தர் தலைமை தவிர்க்கப் பட்டதாக அவர்க்குத் தெரிய வந்தது. அக்கால் அவர் என்னையழைத்து, 'போட்டிக்கு நீ உன் நூலை அனுப்ப வேண்டாம்; திருட்டுப் பயலுக என்னைத் தலைமையினின்று நீக்கி விட்டானுங்க! உன் நூலே வேறு யாரிடமும் தேர்வுக்கு அனுப்ப வேண்டாம். நான் அதை நம் அச்சகத்திலேயே அச்சுப் போட்டு விடச் சொல்கிறேன் என்று கூறி விட்டுத் தம் மகன் திரு. மன்னர் மன்னனைக் கூப்பிட்டு, தம்பி, இதை தம் அச்சகத்திலேயே அச்சுப் போட்டுக் கொடுத்து விடு' என்று கட்டளையிட்டார். -