பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. கொய்யாக்கனி அச்சீடு! பாவேந்தரின் கட்டளைப்படி, திரு. மன்னர் மன்னன் கொய்யாக்கனியை அச்சேற்றினர். அஃது அச்சாகி முடியுந் தறுவாயிலிருந்த பொழுது ஒருநாள் மாலை நான் பாவேந்த ரின் பழநியம்மா அச்சகத்திற்குச் சென்றேன். அக்கால் மன்னர் மன்னன் என்னிடம், நீங்கள் தலையிடம் (பாவேந் தரை நாங்கள் தலை யென்று சுருக்கமாக அழைத்துக் கொள்வோம்) ஏதாவது, கொய்யாக்கணிக்கு மதிப்புரை கேட்டிர்களா? என்ருர். நான், இல்லையே, நான் ஏன் மதிப் புரை கேட்பேன்?’ என்றேன். அவர் என்னைக் கேட்டதிலிருந்து, பாவேந்தர் அதற்கு தான் கேளாமலேயே மதிப்புரை ஒன்று எழுதிக் கொடுத் திருப்பார் என்று உயர்த்துணர்ந்து கொண்டு, மன்னர் மன்னனிடம் அவ்வாறு பிலுக்கினேன். அதற்கு அவர், "நீங்கள் கொடுத்து வைத்தவர்தாமையா! (அவர் பயன் படுத்திய சொல் அதிர்ஷ்டக்காரர்’ என்பது.) அருமையான மதிப்புரை ஒன்று எழுதிக் கொடுத்திருக்கிரு.ர். நான் அறிந்த வரையில் அவர் இப்படி யாருக்குமே எழுதிக் கொடுத்ததில்லை; அவனவன் - மதிப்புரை வேண்டுமென்று கேட்டுத் தவங்கிடப்பான். இறுதியில் வேண்டா வெறுப் பாகக் கிண்டலாகவோ, ஏனே தானே வென்ருே எழுதிக் கொடுப்பார். இறுதியில் அதையும் வாங்கிக் கொண்டு போவார்கள். நீங்கள் கேளாமலேயே உங்களுக்கு மிகவும் சிறப்பாக எழுதிக் கொடுத்து விட்டாரே; வியப்புதான்! (அவர் பயன்படுத்திய சொல் ஆச்சரியந்தான்’ என்பது.) என்று கூறி, மதிப்புரை எழுதியிருந்த தாளே என்னிடம் கொடுத்தார். அதைப்படித்துப் பார்த்தவுடன், பாவேந்தர் என் மேல் கொண்டிருந்த கள்ளமற்ற மெய்யன்பையும், மதிப் பையும் அறிந்து உள்ளம் உருகி நின்றேன். என் கடை விழி களில் நன்றிக் கண்ணிர் துளிர்த்தது. பாவேந்தர் கொய்யாக்கனிக்குக் கொடுத்த மதிப் புரையைப் பற்றி இரண்டொரு சொற்கள் சொல்வியாகல் வேண்டும். நூலைப்பற்றிய செய்தி கொஞ்சந்தான் அதில் வருகிறது. மற்ற செய்தியெல்லாம் என்னைப் பற்றியதுதான். என்னை அவர் விளங்கிக்கொண்ட தன்மை அவ்வரிகளில் ஆழப் பதிந்திருந்தது. வெறும் சொற்களாக அவற்றைப் பாவேந்தர் பயன்படுத்திவிடவில்லை. அதில் அவர் பய்ன் படுத்திய ஒவ்வொரு சொல்லுக்கும். ஒவ்வொரு வரலாறு உண்டு: உணர்வுண்டு அதிலுள்ள அத்தனைச் சொற்களிலும் அவரின் துய தமிழுள்ளம் - கனிவு நிரம்பிய குழந்தை யுள்ளம் பொருமையற்ற சான்ருண்மையின் பெருந்ததை