பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~ 65 — (வேறு) அலைகுதிக்கும் கடற்கரையில் அமைந்த திருநகரம்! அகல்விசும்பின் மேற்புரண்டு விரிந்திருக்குந் தென்னங் குலைகுதிக்கும் சோலைமலி தென்புதுவை நகரில் குளங்குதிக்கும் மீன்போலும் வாய்குதித்த தமிழில் கலைகுதிக்கும் பாவரசன் பாரதிதா சன்மேல் காதலெனக் கூறியவன் இசைவுதரக் கேட்டேன்: மலேகொதித்து வெடித்ததுபோல் மன்னு:தமிழ்க் கன்னி மணந்தவன்யான்; பிறர்விரும்பேன்; போபோபோ" வென்ருன்! என்றவனின் கால்விழுந்து கண்ணிராற் கழுவி “எத்திறத்தாள் தமிழ்க்கன்னி? என்னைவிட மேலோ? நின்றெனக்குக் கூறுங்கள்’ என்றேளு தோழி, நீடுயர்ந்த தோளுயர்த்தி, விழியுருட்டி நோக்கிக் "குன்றனைத்த புகழுடையாள், கோடிச்சிறப் புடையாள் கூறுபத்துப் பாட்டுப்பதி னென்கணக்கு நூற்கள் பொன்ருத எண்தொகையின் இன்பமவள்; அறத்தாள்: போதுமோடி அன்னவளின் புகழென்ருன் தோழி! புகழ்ந்தவனின் உளம்பொங்கப் புதுப்பாடல் மழையாய்ப் பொழிந்தவனேக் கேட்டறிந்தேன்; பூரித்துப் போனேன் : திகழ்ந்த அழ கொளியும் அவன் கூர்த்தறிவுத் திறனும் திரள்தோளும் மறநெஞ்சும் தமிழர்களை அற்றை இகழ்ந்தவட வரசர்களே இழுத்துவந்த சேரன் ஏந்தலைப்போல் இருந்ததடி என்னென்று சொல்வேன்! புகழ்ந்தவனே வணங்கியென்றன் துயர்நெஞ்சை மீட்டுப் பொன்ருத தமிழோடுன் புகழ்வாழ்’கென் றேனே! (1952)