பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. என்றைக்கு எழுவாயோ? (அறிஞர் பெருமக்களும், குமுகாயத் தொண்டர் களும், அரசியல் தலைவர்களும், தமிழும் தமிழரும் மீட்சியடைவதற்காக அ வர வர் துறையில், ஆழ முயன்றனர்! முயல்கின்றனர்! இன்றைக்குக் காலம் நன்கு கனிந்துள்ளது! அப்படிக் கனிந்துள்ள இன் றைக்கே எழாமல் என்றைக்குத் தமிழனே நீ எழப் போகின்ருய் என்று, அவலத்தோடு ஆசிரியர் கேட் கிருர் இப் பாடலில் பாவேந்தரை முன்மைப் படுத்தியவாறு பாடல் எழுதப்பெற்றது மிகவும் குறிப்பிடத்தக்கது.) இன்றைக்கே எழாமல்,நீ என்றைக்குத் தான் எழுவாய்? எண்ணிப் பார்ப்பாய்! என்றைக்குக் காலமினி ஏற்றபடி, கனிந்துவரும், இந்நாள் போல ? குன்றைத்துரள் செய்கின்ற வல்லுணர்வை உன்நெஞ்சில் குவிக்கும் வண்ணம் என்றைக்குப் பாவேந்தன் இனியொருகால் எழுந்துவந்தே எழுதித் தீர்ப்பான் ?