பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ இனமே! தமிழ இனமே! (திருச்சியில் நடைபெற்ற தமிழக விடுதலை மாநாட்டுக்கு வரவேண்டி தமிழர்களை அழைத்த ஆசிரியரின் வேண்டுகோள் பாவில் ஒருபகுதியிது ! வாழ்ந்து கிடந்த வரலாற்றைப் புதுக்க வருக எனும் வேண்டுகோளுக்கிடையில் பாவேந்தரை நினைவு கூறும் அரிய பகுதி இது) உனைவிழிப் பிக்கவும் உனைவாழ் விக்கவும் உனையில் வுலகத்துள் உரிமை இனமெனப் பட்டயங் கட்டிப் பழம்புகழ் மீட்கவும் கொட்டிய முரசம் எத்தனை தெரியுமா? கூக்குர லிட்டவர் எவர்எவர் அறிவையா? ஏக்கமுற் றுன்னே எழுக எழுகென எழுதிக் குவித்த கைகள் எத்தனை? தொழுது வேண்டிய வாய்கள் எத்தனை ? தோளை உலுக்கித் துக்கி நிறுத்தி வாளேச் சுழற்றடா என்றுனை வாழ்த்திய பாட்டின் வேந்தன் பாரதி தாசற்கு நீட்டி முழக்கி விழாநிகழ்த் தினேயே ! என்ன பொருளில் இவ்விழா வெடுத்தாய்? சொன்னவன் பாட்டின் சொற்பொருள் என்ன? என்ன சொன்னன் ? எவர்க்கவன் சொன்னன்? இன்ன விளக்கங்கள் எல்லாம் அறிவையா? |சுவடி :10ஒலை : 1.1