பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நரம்புக்கு நரம்பு உணர்வேறும்!-உயிர் நாடிக்கு நாடி தமிழ் ஊறும்! (பாவேந்தர் என்னென்ன விளைவுகளைச் செய் செய்தார், அவர் யார் என்பனவற்றை, இனிய எளிய தமிழ்ப்பாவில், சின்னஞ்சிரு.ர்கள் ப யி ன் று பயன் பெற்றுத் துய்க்குமாறு, வடித்து ஊ ட் டு கி ரு ர் ஆசிரியர்! அது, இஃது!) பாட்டுக்கு வேந்தர் பாவேந்தர்-அவர் பாரதிதாசன் எனும் வேந்தர்!-தம்பி ஏட்டுக்கு ஏடு எழில்கொழிக்கும்-அவர் எழுத்துக்கு எழுத்து தமிழ் மணக்கும்! (பாட்டுக்கு) கூட்டுக்குள் ஆவி தமிழ் என்ருர்-அவர் குரலுக்குக் குரலால் நமை வென்ருர்-நம் வீட்டுக்கு வீடு அவர் பாடல்-பெரும் வீதிக்கு வீதி அவர் புகழாம்! (பாட்டுக்கு). நரம்புக்கு நரம்பு உணர்வேறும்-உயிர் நாடிக்கு நாடி தமிழ் ஊறும் ! கரம்புக்கு உழவாய் மனம் உழுதார்-நல்ல கழனிக்கு மழையாய்த் தமிழ் பொழிந்தார்! - ... " (பாட்டுக்கு) இருளுக்கு ஒளியாய் அவர் திகழ்ந்தார்-நல்ல இயற்கைக்கு உயிராய் எழில் கொடுத்தார்! மருளுக்கு மருந்தாய்த் தமிழ் விளைத்தார்-தம்பி! மடமைக்கு எதிராய்ப் போர் தொடுத்தார்! . (பாட்டுக்கு) (குரல் 4. இசை. 5-6)