பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. நாளையும் நீ வாழ்வாய்! (தமிழ் விருந்தளித்துத் தணிப்பறியா வேட்கை யினைத் தணித்துக் குமிழ் சிரிப்பால் கவர்ந்து, கொள் கையுரம் ஊட்டி இடையிற் பிரிந்த ஏந்தல் பாவேந்த ரின் நினைவுகள் தந்த துயரமூட்டத்தின் புலம்பலாகப் பாடல் ஓட்டங் கொள்கின்றது! நம்மையும் அவல நினைவுக்குள் மூழ்க்கி, அப் பெருமகனை யெண்ணி உள்ளங் கசிய வைக்கின்றது! பாவேந்தர் நினைவு மாலையின் ஒரு ம ல ரா. க வெளிப்போந்த அரிய பாடலிது!) - செந்தமிழ்சேர் நல்லுருவே முத்தமிழ்வாழ் நெஞ்சே! செத்திருந்த தமிழினத்தை நல்லுணர்வால் கூட்டி எந்தமிழால் உயிரூட்டி எழுந்துலவ விட்ட இணையற்ற பாவரசே ஏற்றமிகு குன்றே! தந்தபெரும் பாக்களினல் தமிழினத்தார் கொண்ட தணிப்பறியா வேட்கையினைத் தணித்துயர்ந்த வேந்தே! எந்தநினை வேற்பதல்ை உன் நினைவு சாகும்? எத்தனைநாட் சென்றிடினும் நினைக்கில் உளம் வேகும் தமிழ்க்கின்பம் சேர்த்தாயே அதையெண்ணு வோமா? . தமிழ்ப்பகைமுன் ஒருதனியாய் நின்றுமொழிப்போரைச் சிமிழ்க்காமல் நடத்தினையே அதைநினைந்தே உள்ளம் சிலிர்ப்போமா? செழுந்தண்வாய் தமிழ் மணக் கப்பேசிக் குமிழ்ச்சிரிப்பால் கவர்ந்தனையே, அதனை நினைப் டோமா? குலைவதிலா வல்லுரத்தோ டுலவியவெம் புலியே! தமிழ்ப்பொழிலே உணர்வூற்றே! சொற்குவையே பெய்த தண்டமிழ்த்தேன். பாமழையே! எங்கன்மறப்போமே? பெருந்துன்பம் வாய்த்திடினும் வாய்மையறம் தாழாப் பீடுறநீ வாழ்ந்தனையே அதனநினைப் போமா ? விருந்தென்று. பெருந்தமிழை நெஞ்ச இல இட்டு வேண்டுமட்டும் வழங்கிய, நீ பசிதீரத் தீர