பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியற்‌ கடமைகள்‌

275

போகமாகத் தெரிந்திருந்தும் அந்தச் சாதுக்களைக் கைவிட்டுப் போவது தர்மமா? அன்றியும் நீ மகாராணியாய் இருப்பதும் உனக்கு நான் கணவனாயிருப்பதும் எனக்கு எவ்வளவோ மேன்மை. அந்த மேன்மையை இழந்துவிட எனக்குச் சம்மதமில்லை” என்றேன். அதற்கு ஞானாம்பாள் சொல்லுகிறாள்:- “ராஜ்ய பாரத்தை வகிப்பது எனக்கு அசம்மதமாயிருந்தாலும் அது உங்களுக்குப் பிரியமாயிருக்கிற படியால் உங்களுடைய சித்தப் பிரகாரம் நடக்கக் காத்திருக்கிறேன். பெரிய மலையைத் தூக்கித் தலைமேல் வைத்துக்கொண்டது போல ராஜாங்க பாரத்தை நான் வகித்துக் கொண்டபடியால், அதை நான் தாங்கும்படி நீங்களும் எனக்கு உதவி செய்யவேண்டும். ஏனென்றால் அரசு செலுத்துவது நம்முடைய வீட்டுக் கிள்ளுக்கீரை யல்ல. உலகத்திலுள்ள சகலத் தொழில்களிலும் அதிகாரங்களிலும் ராஜாதிகாரம் எப்படி மேலானதா யிருக்கிறதோ, அப்படியே அதைச் சேர்ந்த வேலைகளும் அபாரமாயிருக்கின்றன. ஒரு குடும்பத்துத் தலைவனாயிருக்கிறவன் அந்தக் குடும்பத்துக்காக ஓயாமல் பாடுபடுகிறான். கோடானுகோடி குடும்பங்களுக்குத் தலைவனாயிருக்கிற இறைவன் ஒரு நிமிஷமாவது சும்மா யிருக்கலாமா? சொற்பக் கூலியை வாங்கிக்கொண்டு வேலை செய்கிறவன் அகோராத்திரம் உழைக்கிறான். அப்படியானால் எண்ணிக்கை யில்லாத வருமானங்களையும் ஊதியங்களையும் ராஜ சுதந்திரங்களையும் ஜனங்களிடத்தில் பெற்றுக்கொண்டு அநுபவிக்கிற அரசன், அந்த ஜனங்களுக்காக எவ்வளவு பாடுபடவேண்டும்? அரசனுடைய நேரமும் புத்தியும் சக்தியும் ஜனங்களுக்குச் சொந்தமேயன்றி, அரசனுக்குச் சொந்தமல்ல. ஜனங்களுடைய சௌக்கியத்துக்காக ராஜாங்கம் ஏற்பட்டிருக்கிறதே தவிர, தன்னுடைய சௌக்கியத்துக்காக ஏற்பட்டிருக்கவில்லை என்பதை அரசன் எப்போதும் தன்னுடைய கருத்தில் வைக்கவேண்டும். அரசன் ஜனங்களுடைய சுகாசுகங்களையே, தன்னுடைய சுகாசுகங்-