உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

புதியதோர் உலகு செய்வோம்

எல்லாம் சமுதாயத்தில் மகளிர் நிலையை உயர்த்தாமல் இல்லை. ஆனால் வன்முறைகளும், தற்கொலைகளும் கொலைகளும் அன்றாடம் நிகழும் அவலங்களாக விரிவது ஏன்?

பழைய மண்ணில் புதிய வித்துக்கள் என்பதுதான் முரண்பாடா?

இல்லையேல் புதிய வித்துக்கள், ஒளி வெள்ளத்தின் கவர்ச்சியில் இருள் திரளுக்குள் நுழையும் முரண்பாடா?

பெண்ணறிவு, மாந்தரின் பேராசைகளைத் துண்டுமா?

பொதுவாகவே எல்லாச் சமயங்களிலும், ஆணுக்கிருக்கும் பல உரிமைகள் பெண்ணுக்கு இல்லாமல் இருப்பது இயல்பாக இருக்கிறது.

காலம் காலமாக வளைந்து போன ஒரு கூனலை நிமிர்த்துவது சிரமம்தான். பெண்ணுக்குப் பெண் எதிரி என்ற கருத்து, மாமியார் - மருமகள் - நாத்தி - அண்ணி - இளைய தாரம் மூத்தவள் மக்கள் என்ற உறவுகளை, விரோதமாகவே நெறிப்படுத்தி வந்திருக்கிறது. கொடுமைகளுக்கு எதிரான சட்ட உரிமை, வழக்கு, தண்டனை என்ற பரிகாரங்கள், தவறுதலாகப் பயன்படுத்தப்பட்டால், நிலைமை இன்னமும் மோசமாகும்.

பழங்காலத்தில், வீட்டுக்குள் கொடுமை என்பது, கணவன் தாசி வீட்டுக்குச் செல்வதும், மாமியார் சொல்லாலும் செயலாலும் மருமகளை நோகச் செய்வதுமாக இருந்தன. அவளைத் தள்ளி வைப்பார்கள், பிள்ளைக்கு மறுமணம் செய்ய முயல்வார்கள். பணம், நகை கேட்பார்கள். ஆனால், காலக்கிரமத்தில், அதிகபட்சமானாலும் மாற்றங்கள் வரும். மனம் திருந்தவும், விட்டுக் கொடுக்கவும், சந்தர்ப்பங்கள் இருந்தன. மூத்தாள் இளையாள் மகளைக்