உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

99

இந்தியத் துணைக்கண்டத்தில், சுதந்திரம் பெற்று ஐம்பத்தாறாண்டுகளான பின்னரும், பொருளாதார, சமூக, சமத்துவம் என்பது அன்றைய நிலையில் இருந்து கிடுகிடுவென்று இறங்குமுகமாகி இருக்கிறது. காந்தியடிகள் ஏழு வகை அறங்களைக் குறிப்பிட்டார். இந்நாள் ஓர் இலக்கிலும் அறம் இல்லாத அதர்ம பரிபாலனங்கள் மக்களை வறுமையிலும் இயலாமையிலும், மிதமிஞ்சிய பொருள் குவிப்பு அதிகாரங்களிலும் சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கின்றன. வன்முறை அட்டூழியங்கள் ஆண்டுக்காண்டு குறையவில்லை.

எட்டு ஆண்டுகளுக்கு முன் இந்த நிலையை, வருந்தத்தக்க உண்மை என்று ஒரு கட்டுரையில் விவரித்திருந்தேன்.

1. ஒவ்வொரு நாற்பத்தேழு நிமிடத்துக்கும் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறாள்.

2. ஒவ்வொரு நாற்பத்து நான்கு நிமிடத்துக்குமிடையே ஒரு பெண் கடத்தப்படுகிறாள்.

3. ஒரு நாளைக்குப் பதினேழு வரதட்சணைக் கொலைகள் நிகழ்கின்றன.

என்றெல்லாம் பட்டியலிட்டிருந்தேன். இந்த இடைப்பட்ட ஆண்டுகளில், பெண்களுக்கு விழிப்புணர்வும் தைரியமும் கொண்டு வர சட்டங்கள் நெறிப்படுத்தப் பட்டிருக்கின்றன. பெண் கிண்டல், வரதட்சணை ஆகிய குற்றங்களுக்கு எதிரான சட்டங்களும் மகளிர் காவல் நிலையங்களும் இவற்றில் குறிப்பிடத்தகுந்தவை.

சட்டங்களும், நெறிமுறைகளும், நீதிகளும் மகளிருக்கு உண்மையில் பயன்பட வேண்டும்; பயன்பட்டிருக்க வேண்டும்; மகளிர் மேம்பாட்டுக்காக நிறுவப்பட்ட பள்ளிகள், உயர் கல்லூரிகள், தொழிற் பயிற்சி மையங்கள்