பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4. அறிவாற்றலா?
நுகர்வு கலாசாரமா?


1958ம் ஆண்டில் குந்தை (நீலகிரி) நீர் மின் திட்டக் குடியிருப்பில் நான் வாழவந்த நாட்கள். நீர் மின் திட்டத்தில் பணியாற்றும் பொறியாளர், அலுவலகங்களிலும் தணிக்கைப் பிரிவிலும் பணியாற்றுபவர்கள். பல்வேறு கனரக ஊர்திகள், இயந்திரங்களை இயக்குவோர் ஆகியோருக்கான குடியிருப்பு அது. அங்கு தற்காலிக அலுவலகங்களும் வசிப்பிடங்களும் ஒரு சிறு துவக்கப் பள்ளியுமே இடம் பெற்றிருந்தன. கடைகண்ணி, பொழுது போக்குத் தலங்கள் எதுவுமே இல்லாத நிலையில், வீட்டுப் பெண்கள் அவ்வப்போது, சினிமா, கடைத்தெரு என்று செல்வதற்கு, குடியிருப்பை ஒட்டியிருந்த படகர் கிராமத்தையே நம்பியிருந்தனர். அங்கே கடைத்தெரு, காய்கறிச் சந்தை எல்லாம் தோன்றியிருந்தன. நான் அங்கு சென்றிருந்த நாலைந்து நாட்களுக்கெல்லாம், பொறியாளரின் மனைவியர் நாலைந்து பேர் என்னிடம், “மஞ்சூர் போகலாமா?” என்று வினவினர். பத்து நிமிடங்களில் ஏறிச் செல்லும் அந்த கிராமம் அப்போது நீர் மின் திட்டத்தினால் வளர்ச்சி பெற்றிருந்தது. ஓர் உயர்நிலைப் பள்ளியும், ஆசிரியர்களுக்கான குடியிருப்புகளும் இருந்தன. அப்போது, பிற்பகல் நேரம் நடக்கவோ, சுற்றித்திரியவோ இதமான வெயிலும் இருந்தது. கடைவீதியில் கால் வைத்ததுமே, புதிதாகத் தோன்றியிருந்த துணிக்கடை எல்லோரையும் கவர்ந்தது எனலாம். தேன்மலர் கண்ட வண்டினம் போல இந்த வண்ணக் கும்பல் உள்ளே நுழைந்தது. ஆனால் என்னை ஈர்த்தது வேறோர் இலக்கு. கிளை நூலகம் - மஞ்சூர் - என்ற முகப்புடன் தெரிந்த