உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

புதியதோர் உலகு செய்வோம்

தற்கொலைக்கு வழி வகுக்கின்றன. பொருளாதார சுதந்தரமும் பட்டப்படிப்பும் உள்ள பெண், கற்புச்சுருக்கில் கழுத்தைக் கொடுக்கிறாள். உடல் சார்ந்த கற்புக் கருத்தியல் உளவியல் சார்ந்த ஆளுமையை எப்போதுமே அவளை சுருக்குக் கயிற்றுள் வைத்திருப்பதால், பெண் சீண்டலிலிருந்து, அவளை அநுமதியின்றி, உரிமையின்றி ஆள்வது வரை ஆணுக்குச் சாத்தியமாகிறது. ஆணுக்குச் சமமாக மட்டுமின்றி, மேலாகவே பட்டங்களையும் பதவிகளையும் பெற்றாலும், திருமணம் என்ற ஒரு முளையில் கட்டப்பட வேண்டும் என்ற கட்டாயம், வாழ்க்கைக்கு உத்தரவாதமாகிறது.

இந்தக் கட்டாயக் கருத்தியல்களில் இருந்து விடுபடும் சுதந்தர மலர்ச்சி எந்தப் படியிலும் பெண்ணுக்குக் கிடைக்கவில்லை என்பதே நடப்பியல் உண்மை. ‘உடலழகை’ மட்டும் குறிப்பாக்கும், ‘மாடலிங்’ சினிமாத்துறைகளில் இன்றைய இளம் பெண்கள் விட்டில் பூச்சிகள் போல் கவரப்படுகிறார்கள். நவீன விளம்பர உத்திகள், காட்சி ஊடகங்களில், அன்றைய தேவதாசி முறையே சிறந்ததாகக் கருதும் வகையில் பெண் கடை விரிக்கப்படும் சரக்காகப் பரிணமிக்கச் செய்கின்றன.

இந்நாள் கைத்தறித் தொழிலாளரைக் காப்பாற்ற மாணவிகள், ஆசிரியர்கள் எளிய சேலைகளில் பவனி வந்தது பற்றிச் செய்திகள் ஆறுதலளிக்கின்றன. இளம் பெண்களுக்கு, கவர்ச்சித் தூண்டில்களில் மனம் கொடுக்காமல் உறுதி கொள்ள பள்ளிப் பருவத்தில் இருந்தே பக்குவப்படுத்தும் உரையாடல் பாடங்கள் இடம் பெற வேண்டும். பள்ளிகளில் இருந்தே அழகுப்போட்டிகளுக்குத் தயாராக்கப்படும் அவலம் கண்டிக்கப்பட வேண்டும். பன்னாட்டு அழகு சாதன வலைகளில் பெண்கள்