பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

55

சிக்கிவிடாமல் பாதுகாக்க வேண்டும். அழகுப் பராமரிப்பு நிலையங்கள், சாதனங்கள் தயாரிப்பு, தொழில் வளமல்ல. பல கோடிகளும், நேரமும் விரயமாகும் தேசிய இழப்பாகவே கணக்காகிறது.

பணிகள், முகப்பூச்சுகள் எல்லாமே அவளை வாணிப சாதனமாக்கித் தீர்ந்திருக்கிறது. அறிவுத்திறமை, சாதனை, பொருளாதார சுயச்சார்பு ஆகிய வண்மைகளை, உடலழகுக் கருத்தியல் சுரண்டிச் சாப்பிட்டுவிடுகின்றன. தனது ‘ஏற்றம்’ என்ற உயர்நிலையில் இருந்து, புதிய நகைகள், சேலைகள், கவர்ச்சிகள் என்ற பளபளப்புக்கு இளைய தலைமுறையினர் வஞ்சகமாக, பள்ளி அழகுப் போட்டிகளில் இழுக்கப்படுவதற்கு எதிர்ப்புக் காட்டுவதில்லை; மாறாக, அது சுதந்தரம் என்று பெருமிதம் கொள்கிறாள். மாடலிங், அழகிப் போட்டி வெற்றி திரை மின்மினி என்ற ஏணிகள் இளைய தலை முறையினரின் அறிவார்ந்த உணர்வுகளையே இருளுக்குள் தள்ளிவிடுகின்றன.

இளமைக்குத் துணிவு உண்டு; வேகம் உண்டு; ஆற்றலும் அதிகம். இந்த ஆற்றல், ஆணிடம் ஒடுக்கி அழிக்கும் ஆற்றலாகவும், பெண்ணிடம் பலவீனமாகவும் வலுப்பெறுகிறது. கலைத்துறையில் திரைக்குப்பின் ஓசைப்படாமல் நிகழும் தற்கொலைகள், கொலைகள், மனிதவள ஆற்றலின் பேரிழப்புக்களாகும். வயது முதிர்ந்தவர் தற்கொலை செய்து கொள்வதில்லை.

காந்தியடிகள், சுதந்திரப் போராட்டத்தின் போது, தம்மைச் சந்திக்க வந்த பெண்களில் நகையணிந்த பெண்களைக் கண்டால், சிரித்தபடியே கழற்றச் சொல்லி, வாங்கி அரிசன நிதிக்கு ஆதாரமாக்கிக் கொண்டார். சுதேசிக் கதர் ஆரணங்குகளுக்கு ஆடையாயிற்று. இசை