உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

63

பினால் உண்டு, அறிவினால் மக்கள் சேவை செய்யப் பழகி ஒவ்வொரு மனிதரும் உள்ஆற்றலைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். உலகமே வியந்தது அந்நாள்.

ஆனால், அன்றைய போராட்ட இலக்கு வேறு. அரசியல் விடுதலைக்குப்பின் அதே ஒற்றுமை, ஆக்கபூர்வ வளர்ச்சிக்குக் காக்கப்பட வேண்டும். அடிகள் தம் இன்னுயிரை ஈந்தும், எந்தத் தலைவரும் பாடம் கற்கவில்லை. இது இந்த ஐம்பத்தேழு ஆண்டு மக்கள் சமுதாய நடவடிக்கையில், வாழ்க்கைப் போராட்டங்களில் பளிச்சிடுகிறது. மண் வறண்டு நீராதாரம் வற்ற, செல்வம் கோடி கோடியாக எங்கோ சேருகிறது. தன்னலம் அழிக்கும் ஒழுக்கங்கள், எதுவுமே இந்த நாள், வருங்கால சமுதாயத்துக்கு உதாரணங்களாக எவரிடமும் இல்லை. ஆடையாபரணங்கள், அலங்கார உரைகள், சொல் வன்மைகள், மாலை மரியாதைகள், வண்ண விளம்பரங்கள், இவற்றைச் சாதிக்கும் திறமை, பணவசதி ஆகியவை எல்லா இளைஞருக்கும் இன்று இலக்காக இருக்கின்றன.

தொழில் நுட்பவியல் படித்துப் பட்டம் பெற்ற ஒரு பெண், காட்சி ஊடகத் துறையில் இருக்கிறாள். பின் ஏன் அந்தத் துறையில் படித்துப் பட்டம் வாங்கினார்கள்? இது வீண்தானே?

“இல்லை, இதில் திறமையாகச் சாதிக்கலாம் என்று வந்தேன்.”

“என்ன திறமை? படம் எடுப்பீர்களா? அல்லது அழகிய முகத்தால், நடிப்பால் பலர் முன் தோன்றிப் புகழ் பெறுவீர்களா?”

புரியவில்லை. ஆனால் அதுதான் இன்றைய இளைஞர் பலருக்கு இலக்காக இருக்கிறது. பன்னிரண்டாண்டுகள்