உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

புதியதோர் உலகு செய்வோம்

அடைகாத்துப் பொரியும் முட்டைக் குஞ்சுகள், பொறியியல், மருத்துவமென்று, சாளரங்களில் நெருங்கி, நசுங்கி, உள் நுழைந்து, சிறகுபெற, பெற்றவரைக் கடன் பெறச் செய்து, கவலைகளைச் சுமக்கச் செய்து, வெளியே படித்து வர வேண்டும். அவை ஒரு உருப்படியாக சமுதாயத்தை, மண்ணை வாழ வைக்குமோ?

இல்லையேல் மண்ணை உதறிப் பறந்து செல்லுமோ? அற்ப உணர்வுகளில் அழியுமோ? தெரியவில்லை.

அண்மையில் ஆசியக் கோப்பைக்காக இலங்கையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டபோது, நான் முதலில் குறிப்பிட்ட நண்பர், அதை ஆர்வத்துடன் பார்த்தார். ஐந்து நிமிடங்களுக்கொரு முறை அவருக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. யார் ஆடுகிறார்கள்? இந்திய ஆட்டக்காரர்கள் எப்படி ஆடுகிறார்கள்? என்ற தகவல்களை அப்போதைக்கப்போது இவர் சொல்ல வேண்டும். இந்த விவரங்களை அவரே தொலைக்காட்சியில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாமே?

நம் ஆட்டக்காரர்கள் அவர்கள் ஆடும்போது காட்சி பிடிக்கவில்லை என்றாலும், இவர்கள் ஆடும்போது, ஆட்டமிழந்து விட்டாலும், அவரால் அதைத் தாங்க முடியாது. அதனால் நண்பரின் வாயிலாக அதைத் தெரிந்து கொள்கிறார். அதே உணர்வுகளில் இவருக்கும் பாதிப்பு நேரும். முதல்நாள் தோல்வியில் இருந்து மிகக் குறுகிய பரபரப்புக் கட்டத்தில் வெற்றியை இந்தியா தேடியபோது, இரவு முழுதும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். ஆனால், இறுதி ஆட்டத்தில் தோல்வியுற்றபோது, நண்பரின் நண்பர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, வன்முறைக்குத் துணிந்து விட்டார். ‘ஒ, பொருட்களை உடைக்கிறான்’ என்று