உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

புதியதோர் உலகு செய்வோம்

கருத்தைப் பதிக்கும் சினிமா சின்னத்திரைகளின் நச்சு வளையங்களை அழிக்க இந்தப் புதிய இளைஞர் சமுதாயம் புறப்பட வேண்டும்.

நமது எதிர்கால நம்பிக்கைகள் காப்பாற்றப்பட வேண்டும். வெறி உணர்வுகளைத் துண்டிவிடும் கவர்ச்சிகளைத் தாண்டிச் சிந்திக்கச் செய்ய வேண்டும். இது நடக்குமா என்பது வினாவாக இருக்கலாகாது. நடக்க வேண்டும். மானுடம் சிந்திக்கும் ஆற்றல் பெற்றது. இதுவே மானுடச் சிறப்பு.

அமுதசுரபி, செப்டம்பர் - 2004