உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6. பெண் மொழி

பெண் எழுத்து, அல்லது மொழி, அக்கினிப் பிரவேச கட்டத்துக்கு வந்திருக்கிறது. பெண் மொழி, உடல் சார்ந்த உடல் மொழியாகவே இருப்பதால் ஆபாசம் என்ற கூக்குரலும், எங்கள் உடல், எங்கள் உணர்வுகள், எங்கள் எழுத்துரிமை என்ற எதிர்க்குரலும் செக்குமாட்டு வாழ்வில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. “சமுதாயம் பாழ்பட்டுப் போகும். உங்கள் உரிமைகளுக்கும் எழுத்துகளுக்கும் எல்லைகள் உண்டு. அடங்கு அல்லது அடக்குவோம். வெட்டு, குத்து, எரியூட்டு” என்பன போன்ற ஆத்திரவெடிகளும் “ஆண்டாள் எழுதவில்லையா அல்லது மீரா எழுதவில்லையா” என்ற அடங்கிய எதிர்க் குரல்களுமாக அரங்குகள் கலகலத்தன.

இந்தப் பெண் மொழி என்பதோ உடல் மொழி என்பதோ இத்தனை நாட்களில் புரிந்திருக்கவில்லை. பெண் எழுத்து என்பதும் கற்பு மீறிய எல்லைகளைத் தொடலாகாது என்ற நடப்பியல் இப்போது புரிகிறது. இந்த உடல் மொழி (அல்லது பெண் மொழியை ஆராய்ந்து பார்த்தால், அது பெண்ணுடல் சார்ந்த போகம் தொடர்பான சொற்களை வைத்துக் கட்டிய இலக்கியம் என்பதாக இருக்கிறது). ஆண் இத்தகைய படைப்பை உருவாக்கினால், அது ‘அற்புதப் படைப்பா’கிறது. பெண் இப்படி ஒரு படைப்பை உருவாக்கினால் அது ‘ஆபாச’மாகிறது.

நாயக நாயகி பாவம் என்ற அலங்காரங்களில், பெண் போகமே செய்தியாகும். இங்கே பெண், போகத்துக்கான உடற்கூற்றினால் மேன்மை பெறுகிறாள். காலம் காலமாகப் பெண், ஆணுக்கு அனுபவிப்பதற்குரிய சாதனமாகவும், வமிசம் தழைக்க ஓர் ஆண், அல்லது பல ஆண் மக்களைப்