பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

புதியதோர் உலகு செய்வோம்

அடியாகவே போராட வேண்டியிருந்தது. ஆனால் ஆதிக்க வர்க்கமோ, இவர்கள் அந்தக் காலத்திலும் ஒன்று சேர்ந்துவிடாத தற்சார்பு அற்ற நிலையிலேயே வைக்கக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

‘உடலுக்கப்பால், நீ உயர்ந்தவள், சக்தி வாய்ந்தவள். உன் ஆற்றலினால் நீ உலகையே வசப்படுத்த முடியும் என்று மொழிந்தவர் காந்தியடிகள்தாம். கற்பு நியாயத்தை இரு பாலாருக்கும் உரியதாக்கி மனித மேன்மைகள் அவளுக்கும் அளிப்போம் என்று குரல் கொடுத்தவர், பாரதி.

இலட்சிய அப்பத்தை முழுமையாகப் பெறும் நோக்குடன் டாக்டர் முத்துலட்சுமி அம்மையும் சிஸ்டர் சுப்புலட்சுமி அம்மையும் மாற்றங்களுக்கான போராட்டங்களில் தம்மை உட்படுத்திக் கொண்டார்கள். வெற்றியும் ஒரளவு கண்டார்கள்.

ஆனால் அந்த ஒரளவுக்குக் கீழேயே ஆண் ஆதிக்கக் கோட்டைக்கு அடி நிலையான பெண் உடல் கருத்தியல் குழி பறித்திருந்தது. அப்போது தெரியவில்லை. இந்நாட்களில் வெட்ட வெளிச்சமாயிருக்கிறது. தேவதாசி முறை ஒழிப்பினால், இசை நாட்டியக் கலைகள் முடங்கி விடவில்லை. இயல்- இசை-நாடகம் ஒரே திரைத்துறையாகப் பரிணாமம் பெற்றிருந்த காலத்தில் அபூர்வமாகவே பெண்கள் நடிக்க வந்தார்கள். கைக்குழந்தைக்குப் பால் வாங்கிக் கொடுக்கக் காசில்லாமல் குடும்ப வறுமையைப் போக்க வழி தெரியாமல் இந்த நிழலுக்கு வந்தார்கள். படத்தில் நடிக்க ஒப்பந்தம் என்று கையொப்பமிடும்போது உடைக்குறைவு, அத்துமீறல்களைப் பற்றிய முன்னுணர்வுகளே இல்லை. கூண்டில் பிடிபட்ட பிறகுதான் சிறகுகள் வெட்டப்பட்டது தெரியவரும். வயதாகிச் சக்கையாக வெளியேறும்போதும் அவளிடம் தவறு செய்த குற்ற-