பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

59

தஞ்சை மன்னர், புலவரவையை அலங்கரித்த முத்துப் பழனியம்மை, இந்தப் பெண் மொழியைக் கையாண்டு பாடல் புனைந்தார். அப்போதைய அவைப்புலவர்கள் அதை ஏற்று, அவருடைய கவித்திறனையும் புலமையையும் பாராட்டி மகிழ்ந்தார்களாம். ஆனால் ஒரு நூறு ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது. ஆங்கிலேய அரசில், சமூக தருமங்களின் பாதுகாவலர்களாக விளங்கியவர்கள், முத்துப்பழனியம்மையின் பாடல்களுக்குத் தடை விதித்தனர். ஆனால், அதே தேவதாசி மரபில் பின்னர் வந்த நாகரத்தினம் அம்மாள், முத்துப்பழனியம்மையின் பிரச்சினைக்குரிய பாடல்களைத் தேடி அச்சிட்டபோது, கைம்பெண் மறுமணத்துக்காகவும், பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் அரும்பாடுபட்ட சமூக சீர்திருத்தவாதியான வீரேசலிங்கம் பந்துலு தீவிரமாக எதிர்த்தார். அப்பாடல்களுக்குத் தடை கோரினார். ஏன்? என் உடல், என் உரிமை, என் வாழ்வு என்ற கோட்டில் போராட்டக்காரியாக விளங்கிய நாகரத்தினம் அம்மாள், தேவதாசி ஒழிப்புச் சட்டத்தையே எதிர்த்தார்.

இந்த முரண்பாடு ஏன்?

ஒரு பெண்ணின் ஆற்றலை, அவள் இயக்கத்தை, உடல் உடலே என்ற கருத்தியலில் முடக்கலாகாது என்ற இலட்சியத்தை எட்டுவதற்குரிய, போராட்டத்துக்குரிய வழிகளே அவை. இரண்டு தடங்களிலும் அவள் பத்திரமாக முன்னேறவில்லை. தேவதாசி என்ற படியில் கல்வி கேள்விகளுக்கான வாய்ப்பு இருந்தது. ஆனாலும் அந்தக் கலைத்திறன் அவள் உடல் கருத்துடன் முடிந்தது. குலமகளுக்கோ எந்த வாய்ப்பும் இல்லை. பால்யமணம், கைம்பெண், இம்சைகளுக்காளாதல், புறக்கணிப்புகள் என்றெல்லாம் சுமந்த சமூகத் தீமைகளுக்கு ஒவ்வோர்