உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9. மாதா-பிதா-குரு


இன்று குழந்தைகளாக இருப்பவர்களே, நாட்டின் நாளைய எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றனர். இவர்களுடைய உடல் ஆரோக்கியம், கல்வியறிவு, செயலாற்றும் திறன் ஆகிய செல்வங்களை ஒருங்கே பேணி வளர்ப்பதில்தான், நாட்டின் மனித வள ஆற்றலுக்கான அடிநிலை அமைகிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் அன்றைய பாரதப் பிரதமர் நேருவிலிருந்து இன்றைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வரை, பல்வேறு தளங்களில் குழந்தைகளுக்கு ஊக்கம் அளித்து செயல்பட்டு வருகின்றனர்.

குழந்தை, தாயின் கருவில் இருக்கும்போதே அறிவு பெறத் தொடங்கிவிடுகிறது என்று உளவியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

தாயின் உயிர்நாடியுடன் பிணைந்து கருவாக வளர்ச்சி பெறும்போது, தாயின் மன, உடல் நலங்களை அது சார்ந்து உள்வாங்கிக் கொள்கிறது. இதனாலேயே கருவுற்ற பெண்கள் அமைதியுடனும் மனநிறைவுடனும் இருக்க வேண்டும் என்பதற்கான சடங்குகள் மரபு வழிப்படுத்தப்பட்டன. தாயின் கருவறையில் இருந்து வெளி உலகுக்கு வந்து தொப்புள்கொடி துண்டிக்கப்பட்ட பின்னும் இப்பந்தம் வேறாகிவிடுவதில்லை. மார்பகம் சுரக்க, சேய்க்கு அமுதூட்டுகிறாள் தாய்.

வெகுநாட்களுக்கு முன் ஒர் உளவியல் மருத்துவர் எழுதிய கட்டுரைத் தொகுப்பொன்றைப் படித்தேன். ஒரு சேய் பிறந்து பத்து நாட்களுக்குள் மனிதக் குணஇயல் படிந்துவிடுமாம். சேயின் முதல் உணர்வு பசிதான். உடன்