உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

புதியதோர் உலகு செய்வோம்

உணவுத் தேடல். சரியான பசி நேரத்தில் அதற்கு அமுது கிடைக்க வேண்டும். சில நொடிகள் தாமதமாகி, பசியுணர்வு விஞ்சிவிட்டால், சேயின் குடலில் இருந்து மலம் இயல்பாக வெளியேறாதாம். பசி உணர்வே தெரியாமல் அடிக்கடி அமுதூட்டுவதும், சீரணத்துக்கு உகந்ததன்று என்பது மட்டுமின்றி, அந்தக் குழந்தை பொறுப்பற்ற ஊதாரியாக உருவாகக் காரணமாகுமாம். ஒரு மனிதனின் முழு குண இயல்பும், ஐந்து வயதுக்குள் அமைந்து விடுவதாக விளக்கியிருந்தார். உணவுக்கான பசி, தேடல், உடனே கிடைத்துவிடுதல் என்ற மூன்று அம்சங்களும் தேவை. திறன், நம்பிக்கை என்று வாழ்வை நிர்ணயிக்கின்றன. எனவே இந்தப் பருவமே மனிதவள ஆற்றல் என்ற நோக்கில் மிக முக்கியமாகிறது.

நாடு சுதந்தரம் பெற்ற இந்த 57 ஆண்டுகாலத்தில் தாய், சேய்நலம் சார்ந்த சிறப்புத் திட்டங்கள் நெறிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த பாரத சமுதாயம் வேறு. மிகப் பெரும்பான்மை மக்களுக்கு அறிவுக்கண் மலர்ச்சியே மறுக்கப்பட்டிருந்த காலம் அது. இன்றைய அறிவியல் சாதனைகள், அந்நாளைய அறிஞர் பெருமக்கள் கனவுகளாகக்கூடக் கண்டிராதவை. மூன்று வயதில் கணினி - தொழில்நுட்ப அறிஞர்களாகவும், இசை மேதைகளாகவும், இலக்கிய வித்தகர்களாகவும், பொது அறிவுக் கருவூலங்களாகவும், நீச்சல் போன்ற விளையாட்டில் சூரர்களாகவும் திகழ்வதை இன்று நாம் அன்றாடம் செய்திகள் வாயிலாகவும் நேரிலும் கண்டும் கேட்டும் வியக்கிறோம்.

மனிதவள ஆற்றல் என்பது எல்லாக் குழந்தைகளிடமும் சாம்பலுள் பொறி போல் உயிர்த்திருக்கிறது. அதை ஊதி, ஒளிவிளக்காக்கி, சமுதாயத்தில் மீண்டும்