பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 / புத்தரின் வரலாறு

செய்து முதலாவது தியானத்தில் அமர்ந்திருந்தார். சிறிது நேரம் சென்ற பின்னர் செவிலித் தாயர் கூடாரத்திற்குள்ளே வந்தார்கள். வந்து சித்தார்த்த குமாரன் தியானத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு வியப்படைந்தார்கள். உடனே அரசருக்கு இச்செய்தியைத் தெரிவித்தார்கள். அரசர் விரைந்து வந்து இந்தப் புதுமையைக் கண்டு வியப்படைந்து, "மகனே இது நான் உனக்குச் செய்கிற இரண்டாவது வணக்கம்" என்று கூறித் தமது கைகளைத் தலைக்குமேல் கூப்பி வணங்கினார்.

சித்தார்த்தரின் கல்விப் பயிற்சி

சித்தார்த்த குமாரனுக்கு எட்டு வயது ஆயிற்று. அவருக்குக் கல்விப் பயிற்சி செய்விக்க விரும்பி சுத்தோதன அரசர், அமைச்சர்களை அழைத்து ஆலோசனை செய்தார். அமைச்சர்கள் "கல்வியிற் சிறந்தவர் விசுவாமித்திரர்.[1] குமாரனுக்கு கல்வி கற்பிக்கத் தகுந்தவர் விசுவாமித்திரரே. அவரையே ஆசிரியராக நியமிக்கவேண்டும்" என்று ஒரே கருத்தாகக் கூறினார்கள். சுத்தோதன அரசர், விசுவாமித்திரரை அழைத்துத் தன் மகனுக்குக் கல்வி கற்பிக்கும்படி ஏற்பாடு செய்தார்.

குறிப்பிட்ட ஒரு தன்னாளில் சாக்கிய குலத்துப் பெரியவர்கள் எல்லோரும் கல்விச்சாலையில் வந்து கூடினார்கள். சித்தார்த்த குமாரனுடன் கல்வி பயில்வதற்காக அவருக்கு ஒத்த வயதினரான ஐந்நூறு சாக்கியச் சிறுவர்களும் வந்திருந்தார்கள். சுத்தோதன அரசர், அமைச்சர் முதலானவர்களுடன் சித்தார்த்த குமாரனை அழைத்துக் கொண்டு கல்விச் சாலைக்குவந்து, தான தருமங்களை ஏராளமாக வழங்கி அரச குமாரனை விசுவாமித்திரரிடம் ஒப்படைத்துத் தாதிமார்களையும் விட்டுவிட்டு அரண்மனைக்குத் திரும்பினார்.

ஆசிரியராகிய விசுவாமித்திரர் சித்தார்த்த குமாரனின் சிறப்பையும் அவரிடம் காணப்பட்ட அறிவு ஒளியையும் கண்டு மகிழ்ந்து தம்மையறியாமலே அவரை வணங்கினார். பிறகு அவருக்குக் கல்வி கற்பிக்கத் தொடங்கினார். அப்போது சித்தார்த்த குமாரன் அவரைப் பார்த்து, "ஆசிரியரே! தாங்கள் எந்த எழுத்தைக் கற்பிக்கப் போகிறீர்கள்? தேவலோகத்து எழுத்துக்களையா, அல்லது மண்ணுலகத்து எழுத்துக்களையா? மண்ணுலகத்துச் சாத்திரங்களையா, விண்ணுலகத்துச் சாத்திரங்களையா கற்பிக்கப் போகிறீர்கள்? அவற்றையெல்லாம் நானே அறியவல்லேன்" என்று


  1. இவரைச் சர்வமித்திர் என்றும் கூறுவர்