பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 31

கடைசியாகச் சந்நியாசியைப் பற்றி யோசித்தார். தீய எண்ணங்களும் தீய செயல்களும் இல்வாழ்க்கையினால் ஏற்படுகின்றன. இல்லறத்தில் உயரிய எண்ணங்களுக்கும் உயர்ந்த ஒழுக்கத்திற்கும் இடமில்லை, உயர்ந்த எண்ணங்களுக்கும் உயர்ந்த ஒழுக்கத்திற்கும் துறவறம் நல்லது என்று நினைத்து அதில் விருப்பங்கொண்டார்.

இவ்வாறு எண்ணியவண்ணம் சித்தார்த்த குமாரன் பூஞ்சோலையை அடைந்தார். அங்குப் பலவித இனிய இயற்கைக் காட்சிகளைக் கண்டார். மாலை நேரமானவுடன்தெளிந்த நீருள்ள குளத்தில் நீராடினார். நீராடிய பிறகு ஒரு கற்பாறையில் அமர்ந்து தமது உடம்பை நன்றாக அலங்காரம செய்துகொள்ள வேண்டுமென்று நினைத்தார். அப்போது பணிவிடையாளர் வந்து அவரை தேவேந்திரன் கையின் துன்பங்களும் துறவற வாழ்க்கையின் மேன்மைகளும் அவர் மனத்தைவிட்டு அகலாமல் இருந்தன. அவர் மனம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது.

அரண்மனை திரும்பியது

தேவேந்திரனைப் போன்று அலங்கரிக்கப்பட்ட சித்தார்த்த குமாரன் அரண்மனைக்குப் புறப்பட்டார். இன்னிசை முழங்க, பரிவாரங்கள் புடைசூழ அவர் தேரில் அமர்ந்தார். அவ்வமயம் சுத்தோதன அரசரால் அனுப்பப்பட்ட ஒருவர் வந்து, யசோதரை தேவியாருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த செய்தியைத் தெரிவித்தார். இதைக்கேட்ட இவர், தாம் செய்ய நினைத்திருக்கும் முயற்சிக்கு ஒரு தடை பிறந்தது என்று மனதில் நினைத்து, "எனக்கு ஒரு ராகுவன் பிறந்தான்" என்று தமக்குத்தாமே கூறிக்கொண்டார். இதைக் கேட்டுவந்த ஆள் சுத்தோதன அரசரிடம் போய் இவர் தமக்குள் சொல்லிக் கொண்டதைத் தெரிவித்தார். அதைக்கேட்ட சுத்தோதன அரசர் தமது பேரனுக்கு இராகுலன் என்று பெயர் சூட்டினார்.

சித்தார்த்த குமாரன் தேரில் அமர்ந்து ஊர்வலமாகத் தமது அரண்மனைக்குத் திரும்பி வந்தார். வரும் வழியில் ஆடவரும் மகளிரும் தத்தம் இல்லங்களில் இருந்து இவரைக் கண்டு மகிழ்ந்தார்கள். ஒரு மாளிகையின் மேல் மாடியில் இருந்த கிரிசா கௌதமி என்பவள் சித்தார்த்த குமாரனைக் கண்டு மகிழ்ந்து இவ்வாறு பாடினாள்: