பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 / புத்தரின் வரலாறு

உடனே, பிரமலோகத்தைவிட்டுப் புறப்பட்டுத் தகாததரிடம் விரைந்து வந்தார். வந்து, தமது மேல் ஆடையை எடுத்து ஒரு தோளின்மேல் போட்டுக்கொண்டு வலது முழங்காலைத் தரையில் ஊன்றி முட்டியிட்டு அமர்ந்து இரு கைககளையுங் குவித்துத் தலைமேல் தூக்கித் ததாகதரை வணங்கி இவ்வாறு கூறினார்: "சுவாமி தாங்கள் அருள்கூர்ந்து தர்மத்தை உலகத்துக்குப் போதியுங்கள். பகலன் சம்புத்தர் உலகத்துக்குப் போதிக்க வேண்டும். இருளினால் மறைக்கப்படாத அறிவுக்கண் படைத்த மக்கள் பலர் உலகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அறநெறியைக் கேளாமல் இருந்தால் நிர்வாண மோக்ஷத்தையடையமாட்டார்கள். அவர்கள் தர்மத்தை அறிந்து கொள்ளக்கூடியவர்கள். சம்புத்தரால் கண்டுபிடிக்கப்பட்ட தர்மத்தை அவர்கள் கேட்கட்டும்."

இவ்வாறு கூறிய பிரமன் மேலும் கூறுவார்:

"ஓர் ஆள் மலையின்மேல் ஏறி அதன் உச்சியிலேயுள்ள ஒரு பாறையின்மேல் ஏறி நின்று மலையடியில் உள்ள மனிதரைக் காண்பதுபோல், ஓ, புத்தரே! உண்மையான மெய்ஞ்ஞானம் என்னும் உயர்ந்த இடத்தில் ஏறியுள்ள தாங்கள், அருள்கூர்ந்து கீழே நோக்கியருளுங்கள். துன்பத்தினால் துக்கப்பட்டு வருந்துகிற மக்களை, பிறந்து இறந்து அல்லல்படுகிற மானிடரை, துக்கத்திலிருந்து நீங்கிய ததாகதரே, அருள்கூர்ந்து நோக்கியருளுங்கள்.

"எழுந்தருளும். ஓ! வீரரே! உலகத்தைச் சுற்றிப் பிரயாணம் செய்தருளுங்கள். பகவரே! தர்மத்தை உபதேசம் செய்தருளுங்கள். உலகத்திலே தர்மத்தை அறிந்துகொள்ளக்கூடிய மக்களும் இருக்கிறார்கள்."

இவ்வாறு சகம்பதி பிரமன் கூறியதைக் கேட்ட பகவான் புத்தர் கூறினார்: "எனது மனத்திலே இவ்வாறு நினைக்கிறேன். என்னவென்றால், இந்தத் தத்துவம் கடினமானது. சாதாரண மக்களால் அறிந்துகொள்ள முடியாதது. மனத்திற்குச் சாந்தியை யுண்டாக்கி உயர்நிலையையடையச் செய்கிற இந்தத் தத்துவம் அறிஞர்களால் மட்டுமே அறியக்கூடியது. ஆகையினாலே ஆசையில் அழுந்தி, ஆசையில் உழன்று, ஆசையில் மகிழ்ச்சி கொள்கிற மக்கள் சார்பு வட்டமாகிய நிதானங்களை அறிந்துகொள்ள முடியாது. சம்ஸ்காரங்களை வென்று ஆசைகளை அடக்கிக் காமத்தை நீக்கிய அறிஞர்களுக்கு மனச்சாத்தியளித்து நிர்வாண மோக்ஷத்தைத் தருகிற இந்தப் போதனைகளைச் சாதாரண உலக மக்கள் அறிந்துகொள்ள