பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 97

கூறுவோம். அவர்கள் வருவதாக இருந்தால் வரட்டும் என்று கூறி, அவர்களிடம் சென்று தாங்கள் புத்தரிடம் போவதைத் தெரிவித்தார்கள்.அதைக் கேட்ட அவர்கள், தாங்களும் வருவதாகக் கூறினார்கள். பிறகு கோலிதரும் உபதிஸ்ஸரும், பரிவிராசகருக்குத் தலைமைக் குருவாகிய சஞ்சயரிடம் இச்செய்தியைக் கூறினார்கள். அதற்கு அவர் "நண்பர்களே! அங்கு போவதினாலே பிரயோஜனமில்லை, நாம் மூவரும் சேர்ந்து பரிவிராசக தர்மத்தை நடத்துவோம்" என்று கூறித்தடுத்தார். இவர்கள் மறுத்தார்கள்.

இரண்டாம் முறையும் மூன்றாம் முறையும் இவர்களைச் சஞ்சயர் தடுத்தார். கோலிதரும் உபதிஸ்ஸரும் மறுத்துஇருநூற்றைம்பது பரிவிராசக மாணவருடன் வெளுவனத்திற்குச் சென்றார்கள்.

இவர்கள் கூட்டமாக வருவதைத் தூரத்திலிருந்து பார்த்த பகவன் புத்தர், "அதோ வருகிற கோலிதனும் உபதிஸ்ஸனும் என்னுடைய முதன்மையான சீடர்கள்” என்று கூறினார்.

கோலிதர், மொக்கலி என்ற பார்ப்பனத்தியின் புத்திரன் ஆகையினாலே அவருக்கு அவருக்கு மொக்கல்லானர் என்றும், உபதிஸ்ஸர், ரூபசாரி என்னும் பார்ப்பனியின் புத்திரன் ஆகையினாலே சாரீ புத்திரர் என்றும் பெயர் வழங்கப்பட்டன.

மொக்கல்லான, சாரீ புத்திரர் என்னும் இருவரும் பகவன் புத்தரிடம் சென்று வணங்கி, அவருடைய உபதேசங்களைக் கேட்டு மனச்சாந்தியடைந்து, சந்நியாசமும் உபசம்பதாவும் கேட்டார்கள். அவ்வாறே பகவர் அவர்களுக்கு அவற்றை அளித்தார். மொக்கல்லானர் ஒரு வாரத்தில் அர்கந்த பதவியையடைந்தார். சாரி புத்தர் இரண்டு வாரத்திற்குப் பிறகு அர்கந்த பதவியையடைந்தார். இவ்விருவரையும் பகவன் புத்தர் தமது தலைமைச் சீடராக ஏற்படுத்தினார். இது மற்றச் சீடர்களுக்குப் பொறாமையை உண்டாக்கிற்று. இதையறிந்த பகவன் புத்தர் அவர்களுக்குக் காரணத்தைக் காட்டி விளக்கி அவர்களின் பொறாமையை நீக்கினார்.

சுத்தோதனர் அனுப்பிய தூதுவர்

சுத்தோதன அரசர், தன் மகன் புத்த பதவியையடைந்து இராசகிருக நகரத்தில் தங்கித் தர்மோபதேசம் செய்கிறதைக் கேள்விப்பட்டு, அவரைக் கபிலவத்து நகரத்துக்கு அழைத்துவரத் தமதுஅமைச்சர் ஒருவரை ஆயிரம் பரிவாரங்களுடன் அனுப்பினார். அவரும் பரிவாரங்களுடன் வந்து, வெளுவனத்தில் தங்கித் தர்மோபதேசம் செய்து கொண்டிருந்த பகவன் புத்தருடைய உபதேசத்தைக் கேட்டு