உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. பெளத்த கருமம் (ஒரு தாய் கருவுற்று, ஒன்பது அல்லது புத்து மாதங்கள் வரை கவலையோடு பேணிவந்து, பின்னர் குழந்தை பிறப்பதையும், அது வளர்ந்து பாலப்பருவம் அடைந்து, பொம்மைகள், கழிகள், வண்டிகள் முதலிய வற்றைக் கொண்டு விளையாடி வருவதையும், நாள டைவில் அது வனுவடைந்து புலன் உணர்ச்சிகளிலும் அறிவிலும் தேர்ந்து வளர்ச்சியடைவதையும் புத்தர் பெருமான் விவரித்துவிட்டு, மனிதன் பாசவலையில் வீழ்வதையும் விடுதலை பெறுவதையும பற்றிக் கூறி யுள்ளது.) பின்னர் குழந்தை வளர்ச்சியடைந்து, கண், காது, காசி, கா, உடல் முதலியவற்றின் தீண்டுகையால் ஏற்படும் ஐந்துவகைப் புலன் இன்பங்களோடும் முதிர்ந்து வரும் அறிவு ஆற்றல்களோடும், அலைந்து திரிகின்றது; பொருள்கள் யாவும் விருப்பத்தைத் து.ாண்டியும், மயக்கியும். இன்பமளித்தும், அருமையா யும், புலன்களின் இன்பத்திற்கு உகந்தவைகளாயும் விளங்குகின்றன. கண்ணால் ஒர் உருவத்தைக் கண்டு, மயக்கு கின்ற உருவங்களிலே அவன் ஆசை கொள்கிறான். வெறுப்பான உருவங்களை விலக்குகிறான். சிந்தனை சிறிதுமின்றிக் கருத்தில்லாமல் அவன் வாழ்கிறான். துக்ககரமான, பயனற்ற அந்தப் பொருள்கள் யாவும் மிச்சமின்றி முழுதும் திாந்து போகக்கூடிய (பரிபாக நிலையான) மனத்தின் விடுதலையை, ஞானத்தினால் கிடைக்கும் விடுதலையை, அவன் அறிவதில்லை. இவ்வாறு அவன் திருப்தி, அதிருப்தி ஆகியவற் றைப் பற்றித் தெரிந்து கொள்கிறான்; அவன் எந்த