பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 புத்தர் போதனைகள் உணர்ச்சியை உணர்ந்தானும், அது இன்பகர மானதோ, துன்பகரமானதோ, அல்ல்து இரண்டு மற்றதோ-எதுவாயிருந்தாலும் அதை வரவேற் கிறான். ஏற்றுக்கொள்கிறான். அதை விடாமல் பற்றிக்கொள்கிறான். இதிலிருந்துதான் மயக்கம் எழு கின்றது. உணர்ச்சிகளில் மயங்குதல் அவைகளைப் பற்றிக் கொள்வதாகும். பற்றிலிருந்து பவம் (அடுத்த பிறப்புக்குக் காரணமான கருமத் தொகுதி) தோன்று கின்றது. பவத்திலிருந்து பிறப்பு (தோற்றம்) ஏற்படுகின்றது. பிறப்பினால்- தளர்ச்சி மரணம், சோகம், துக்கம், துயரம், அரற்றல், கையற்றநிலை ஆகிய வினைப் பயன்கள் தோன்றுகின்றன. துக்கம் அனைத்தும் தோன்றுவது இவ்வாறுதான். (கண்ணைப் போலவே) காது, காசி, நா ஆகிய புலன் உணர்ச்சிகளும், உடலின் தீண்டுகையால் வரும் உணர்ச்சிகளும், மனத்தால் வரும் உணர்ச்சிகளும் இவற்றால் அவன் விருப்பத்தையும் வெறுப்பையும் பெற்று, (முன் கூறியதுபோல்) விடுதலையைப் பற்றி அறியாமல் வாழ்கிறான்.'"

பின்னர் ஒரு ததாகதர். அருகத்து, ஸம்மா ஸ்ம் புத்தர் தோன்றுகிறார்; அவர் பூரண ஞானமும் பயிற்சி யும் பெற்றவர். நன்மையை காடுவோர், உலகை உணர்ந்தவர், மக்களை கெறிப்படுத்திச் செலுத்து வதில் இணையற்ற சாரதி, தேவர்களுக்கும் மானி டர்க்கும் ஆசாரியர், போதியடைந்த பகவர் ஆவார். அவர் தருமத்தை உபதேசிக்கிறார். (மேலே கூறிய) மனிதன் அத்தருமத்தைச் செவிமடுத்துக்