பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடியது யார் ? 139

அண்ணா தாம் என்பது எல்லாருடைய அபிப்பிராயமும். பிருதங்கத்துக்கும், மற்றப் பக்கவாத்தியங்களுக்கும் அப்படி யும் இப்படியுமாக எல்லாம் போட்டுப் பார்த்து இறுதியில், பாகவதருக்கு வழக்கமாக உள்ள பழைய செட்டே இருக் கட்டும்; ஒன்றும் மாற்ற வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து நின்றனர். பாகவதருக்கும் அதுவே சரி என்று

பட்டது. இப்படியே கமிட்டியில் பாஸ் பண்ணி நோட்டீசுக்குக் கொடுத்துவிடுகிறோம். உடம்பை ஜாக்கிர தையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா’ என்று

, n)) விடைபெற்றுச் சென்றனர்.

அவர்கள் போனபிறகுதான் பாகவதருக்கு நல்ல மூச்சு வந்தது. ஹரியைப்பற்றி அவர்கள் எல்லாரும் புகழ்ந்து பேசியதும், தம்முடைய ஸ்தானத்திலேயே முதல்நாள் ஹரியினுடைய கச்சேரியை அவர்கள் போட இருப்பதும் அவருக்குப் பெருமையாகத்தான் இருந்தன. ஆனால் அதே சமயத்தில், இது விஷயமாகக் கமிட்டியிலோ, அடுத்துப் பாடப்போகிற வித்துவான்களுக்கிடையிலோ ஏதாவது அபிப்பிராய பேதம் தலைதுாக்கி விடக் கூடாதே என்றும எண்ணினார்.

காரணம், ஹரி முதன் முதலாகக் கச்சேரிக்கு உட் காருகிறவன்; இளம் வித்துவான். அரங்கேற்றம் இது தான். இப்படி இருக்கும் போது அநுபவம் மிக்க பிரபல வித்துவான்கள் தவறாக எண்ணி விடக் கூடாதே என்பது தான் அவரது கவலைக்குக் காரணம்.

இப்படிப் பல விதமான எண்ணங்களில் உழன்ற அவரது சிந்தனையைச் சுசீலா கலைத்தாள். பெண்ணின்

அழைப்பைக் கேட்டு உணர்வு பெற்ற பாகவதர் திரும்பிப் பார்த்தார்.

பழரசத்தைத் தகப்பனாருக்குக் கண்ணாடித் தம்ளரில் ஊற்றிக் கொடுத்துக் கொண்டே, ‘ஏன் அப்பா, இந்த