பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 புல்லின் இதழ்கள்

வருஷம் உங்களுக்குப் பதிலாக ஹரியா பஜனை மடத்தில் பாடப் போகிறான்?’ என்று கேட்டாள்.

“ஆமாம்! அதற்குள் உனக்கு எப்படித் தெரியும்? நோட்டீஸ் கூட நாளைக்குத் தானே தயாராகும்?’

‘போங்கள் அப்பா. வீட்டுக்குள் நடக்கிற விஷயத்தை நோட்டீஸில் பார்த்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?’’

பின், உன் வழக்கபடி ஒட்டுக் கேட்டுக்கொண் டிருந்தாயோ?”

ஆமாம் உங்களுக்கு எப்போதும் என்னைக் குற்றம் சொன்னால்தான் பிடிக்கும். நான் ஒன்றும் ஒட்டுக் கேட்க வில்லை; உடைசலும் கேட்கவில்லை. ஹரிதான் சற்று முன்பு அக்காவிடம் கொல்லையில் வந்து பிரமாதமாக

அளந்து கொண்டிருந்தான்; ‘என்னைக் கேட்காமலே அப்பா எல்லா ஏற்பாடும் செய்து விட்டார். எப்படித்தான் சமாளிக்கப் போகிறேனோ? நல்ல பெயர் இல்லா

விட்டாலும் கெட்ட பெயராவது வாங்கிக் கொடுக்காமல் இருந்தால் போதும் என்று.’

உடனே பாகவதர், அதை நீ ஒட்டுக் கேட்டுக் கொண்டு வந்துதானே இங்கே சொல்லுகிறாய்? இல்லா விட்டால் உனக்கு எப்படித் தெரியும்? சுசீலா, நீ இந்தப் பழக்கத்தை விட்டுவிடு. நிச்சயம் உன்னை அருகில் வைத் துக்கொண்டு இதை அவன் காயத்திரியிடம் சொல்லியிருக்க மாட்டான். அவன்தான் உன்னைக் கண்டாலே நடுங்கு கிறானே!’ என்றார்.

என்னைக் கண்டு எதற்கு நடுங்க வேண்டும்? நான் என்ன கரடியா, புலியா?’ என்று கேட்டுச் சிரித்தாள் சுசீலா.

சரி சரி, வாயாடி! ஹரியைப் பார்த்தால் இங்கே வரச் சொல்’ என்றார் பாகவதர்.