பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருவின்றி வேறில்லை 169

உடனே பாகவதர், வேண்டாம், வேண்டாம். தம்பூராவுக்குத்தான் வண்டி வேண்டுமே தவிர இவர்களுக் கெல்லாம் என்ன? அதைத் தூக்கிக்கொண்டு நீங்கள் நடந்து போகக் கூடாது. பாபு ஸார், நீங்கள் கவலைப்படாமல் போங்கள்; இதோ இவர்களும் பின்னாலேயே வந்து விடுவார்கள்’ என்று கூறி அனுப்பி விட்டார்.

சுமார் பத்து நிமிஷங்களுக்கெல்லாம் வீடே காலியாகி விட்டது. தனிமையில் விடப்பட்ட பாகவதரைத் தவிர எல்லாருமே கச்சேரிக்குப் போய் விட்டார்கள். ஆனால் இந்த மனம் என்பது இருக்கிறதே, அது விஷமம் செய்கிற பொல்லாத குழந்தையைப் போன்றது. நாலு பேர் இருந்தால் வாலைச் சுருட்டிக் கொண்டிருக்கும். தனிமை யில் விட்டு விட்டால் பிறகு அது பண்ணுகிற லூட்டியை இந்த ஒட்டை உடம்பால் தாக்குப் பிடிக்கவே முடியாது.

மனத்தின் சேஷ்டைகளைத் தாங்க முடியாமல் பாகவதர், நெருப்பில் விடப்பட்ட புழுப்போல் துடித்துக் கொண்டிருந்தார். பஜனை மடமும், அதற்கு முன்னால் வருஷந்தோறும் போட்டிருக்கும் பந்தலும் அவர் மனக் கண்முன் வந்து நின்றன. அதில் வருஷம் தவறாமல் நடக்கும் அவருடைய முதல்நாள் கச்சேரி, இந்த வருஷந் தான் இல்லை. ஆனால் அதற்காக அவர் வருத்தப்பட வில்லை. தம்முடைய வாரிசு ஒருவனைத் தயார் செய்து கச்சேரிக்கு அனுப்பிவிட்ட பெருமையும் மகிழ்ச்சியும் அவருக்கு இருக்கத்தான் இருந்தன.

ஹரியைப் பற்றி அவர் என்னவெல்லாம் கனவு கண்டு கொண்டிருந்தார்! அவனுடைய அரங்கேற்றத் துக்குத் தனியாகப் பத்திரிகை அடித்து, எல்லா வித்துவான் களையும் வரவழைத்து இன்னும் பிரமாதமான ஏற்பா டெல்லாம் செய்ய வேண்டுமென்று அல்லவா அவர்

பு. இ.-11