பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 புல்லின் இதழ்கள்

எண்ணிக் கொண்டிருந்தார்? ஆனால் இத்தனைக்கும் சோதனையைப் போல்; தெய்வம் அவன் பாடுகிற இடத். துக்குக் கூடப் போக முடியாமல் அவரைப் படுக்கையில் அல்லவா கிடத்திவிட்டது!

அதே சமயத்தில், பாபு கூறிய வார்த்தைகள் அவர் நினைவுக்கு வந்தன.-ஒரு வேளை அப்படியும் இருக் குமோ? சிஷ்யன் பாடுகிறான் என்பதற்காகவே கூட்டம் கூடியிருந்தால்? பாகவதர் எப்படித் தயார் செய்திருக்கிறார் என்று பார்க்கவே வித்துவான்களும் வந்திருந்தால்? * எப்போது பையனை மேடையில் ஏற்றுவதாக உத்தேசம்?” என்று அவனுடைய ஒளி பொருந்திய முகத்தைப் பார்த்துக் கேட்காதவர்களே இல்லையே! இப்போது அவர்கள் எல்லாரும் தவறாமல் வந்திருப்பார்கள்; அவரால்தான் போகமுடியவில்லை.

-ஹரி எப்படிப் பாடப் போகிறானோ. நான் எதிரில் இருந்தாலாவது சற்றுத் தைரியமாகப் பாடுவான். இப் போது முற்றும் புதிய மனிதர்களுக்கு மத்தியில், புதிய அநுபவமாகத் தனிமையில் மேடையேறி உட்கார்ந்திருக் கிறான். எதிரே திரண்டிருக்கும் ஜன சமுத்திரத்தைப் பார்த்துச் சபைக் கூச்சம் ஏற்பட்டுப் பயந்துவிடாமல் இருக்க வேண்டுமே. பஞ்சு அண்ணாவும் ராஜப்பாவும் என்னதான் வேண்டியவர்கள் என்றாலும், எல்லாம் ஓரள வுக்குத்தான். கச்சேரி, மேடை, தொழில் என்று வந்து விட்டால்; அவரவர் தங்கள் தங்களுடைய திறமையையும் புகழையும் நிலைநாட்டிக் கொள்வதிலேயே கண்ணாக இருப் பார்கள். மேலும் மத்தியான்னம் செட்டுச் சேர்த்து வாசித்ததிலேயே ஹரியை அவர்கள் எடை போட்டு வைத்திருப்பார்கள். ஆனால் இன்று ஹரி பக்க வாத்தியத் தோடு சேர்ந்து வீட்டில் பாடியது என்னவோ எனக்கே திருப்தியாக இல்லை. ஏதோ கடனே என்று-அவர்கள். வாத்தியத்தைத் துாக்கிக் கொண்டு வந்ததுபோல் - அவனும் கடனுக்குப் பாடித் தீர்த்துவிட்டான். -