பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 புல்லின் இதழ்கள்

சாப்பிடச் செய்த பிறகுதான் காந்தாமணியின் தாய் வேறு பேச்சைத் துவக்குவாள். ஆகவே, வழியில் பணத்தையும் செலவு செய்து; அவர்கள் மனஸ்தாபத்தையும் ஏன் சம்பாதித்துக் கொள்ளவேண்டும்?” என்று எண்ணி, பையிலிருந்த வெள்ளரிப் பிஞ்சை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். அது, உப்பும், நீரும், இனிப்பும், கலந்த மாவாய் அவன் வாயில் கரைந்தது. அதற்குள் குதிரை வண்டி காந்தாமணியின் வீட்டு வாசலில் வந்து நின்றது.

மகிழ்ச்சியோடு, வண்டியிலிருந்து பையுடன் இறங்கிய ஹரி, வாசற்படியருகில் சென்றதும் அப்படியே பேய் அறைந்தாற்போல் திடுக்கிட்டு நின்றான். காந்தாமணியும், அவள் தாயும் அவனை வரவேற்பதற்குப் பதில்; கதவில் பெரிதாகத் தொங்கிய கொண்டிருந்த அலிகார் பூட்டுத் தான் ஹரியை வரவேற்றது. ஹரிக்கு ஒரு நிமிஷம் ஒன்றுமே புரியவில்லை. அவன் மனத்தை என்னமோ

செய்தது.