பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சாயம் வெளுத்தது

ஏமாற்றம் தாங்காமல் ஹரி, கதவில் தொங்கிய பூட்டையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் எங்கே போனார்கள்? இந்த மாதிரி, கதவு பூட்டியிருக்கும் வழக்கம் இல்லையே! ஒருவேளை உள்ளு ரிலேயே எங்கேயாவது போயிருப்பார்களா?” என்று யோசித்தான். ஆனால், வாசலைப் பார்த்தால், பெருக் கிக் கோலமிட்டே பல நாள் இருக்கும் போலிருந்தது. சொல்லாமல் கொள்ளாமல், எங்கேயோ போய் விட்டார் களே என்று எண்ணிய ஹரிக்கு வேதனையாக இருந்தது. அக்கம்பக்கம் விசாரித்தான். அவர்களுக்கு எவ்விதத் தக வலும் தெரியவில்லை.

கையிலிருந்த பை அவனைப் பரிதாபமாகப் பார்த்தது. வெள்ளிரிப் பிஞ்சும், வெற்றிலையும், அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பதாகத் தோன்றின.

அர்த்தமில்லாமல், எத்தனை நேரம் பூட்டியிருக்கும் வீட்டு வாசலின் முன்னால் நிற்பது! இப்படி ஏமாற்றி விட்டார்களே! என்று, அவனுக்குச் காந்தாமணிமீது கோபமே வந்தது.

நேராக, அந்தத் தெருவைக் கடந்து வெளியே வந் தான். சுசீலாவிடம் பொய் சொல்லிவிட்டு வந்ததற்குத் தண்டனையா இது?’ என்று எண்ணிப் பார்த்துக் கொண் டான். இனிமேல் என்ன செய்வது? எங்கே போவது?

பு. இ.-21