பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 புல்லின் இதழ்கள்

விஷயததில் ஒரளவாவது உதவக் கூடியவள் காயத்திரி ஒருத்திதான். அவளைச் சரண் அடைவதைத் தவிர எனக்கு வேறு புகலே இல்லை’ - என்ற எண்ணம் மேலிட் டவுடன் சுசீலா தன்னையும் மீறி, “அக்கா!’ என்று அழைத்தவாறு அவள் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதாள்.

சுசீலாவின் கண்களிலிருந்து உருண்டோடிய கண்ணிரை காயத்திரி விரலால் துடைத்து விட்டாள்.

ஹரி இல்லாவிட்டால் என்னால் இந்த உலகில் உயிருடன் இருக்கவே முடியாது போலிருக்கிறது அக்கா!’

இந்த வார்த்தைகளைக் கூறிவிட்டுச் சுசீலா காயத்திரியின் முகத்தையே தீனமாகப் பார்த்துக் கொண் டிருந்தாள். தன் வாயிலிருந்து வந்த சொற்கள், அவளுக்கே விசித்திரமாக இருந்தன போலும்!

காயத்திரி மெல்லச் சிரித்தாள். ஆம் ஹரியிடம் சுசீலா இத்தனை உள்ளன்புடன் இருப்பது யாருக்குத் தெரியும்?

  • என் எண்ணம் ஈடேற வழியே இல்லையா அக்கா?’’ என்றாள் சுசீலா மீண்டும்

காயத்திரி சுசீலாவின் தலையை உயர்த்தி அவளது விழிகளையே பார்த்த வண்ணம் கேட்டாள்:

  • * 6h.J 60) திறந்து இதுநாள்வரை எதுவுமே நீ உப யோகமாகப் பேசினதில்லையே; எது உன் எண்ணம் சுசீலா? ஹரியை நீ காதலிக்கிறாயா?”

காயத்திரியின் இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் சுலோவின் முகம் வானவில்லைப் போல் வர்ண ஜாலம் கொட்டியது.