பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனம் செய்த மாயை 71.

எந்த விருப்பு வெறுப்புக்களையும் தனியாகச் சுமந்து கொண்டு வாழவில்லை. இனிமேல் எனக்கு இதுபற்றி யோசிப்பதற்கோ, யாருடைய அபிப்பிராயங்களையும் கேட்பதற்கோ விருப்பமில்லை. ஆனால் நீங்கள் எனக்கு ஒரு வாக்குறுதி கொடுக்கவேண்டும்; கொடுக்கிறீர்களா?’, என்று கேட்டாள்.

“தாராளமாகக் கேள், சுந்தரி: ‘ என்றார் சுப்பராமன்.

அவள் நிதானமாகவே கூறினாள்: ‘ இனிமேல் நான் மேடையேறிக் கச்சேரி செய்யப் போவதில்லை. இன்று நான் செய்த கச்சேரிதான் என் முதலும் முடிவுமான கச்செரி.’

இதைக்கேட்டதும் சுப்பராமன் அப்படியே நடுநடுங்கிப் போனார்.

“சுந்தரி, உனக்கு என்ன பைத்தியமா? இதற்காகவா உனக்கு இத்தனை அரும் பாடுபட்டுக் கற்றுக் கொடுத்தேன்? உன்னால்; உன் இணையற்ற சங்கீதத்தினால் என் பெயரும் புகழும் உயரும்; சிறந்த கலைஞானமுடைய ஒரு பெண்ணரசியை முழுக்க முழுக்க எனக்கே சொந்த மாக உரிமை கொண்டாடப் போகிறேன் என்கிற என் கனவுகள் அனைத்தையும் ஒரே நொடியில் தகர்த்தெறிந்து, என் தலையில் பெரிய இடியாகப் போடுகிறாயே சுந்தரி! இது நியாயமா? உன் அசட்டுத் தனமான பேச்சுக்களை இத்துடன் நிறுத்திக்கொண்டு, இசைக் கலைக்கும் உனக்கும் பெருமையைத் தேடிக் கொள். ஆயிரமாயிரம் ரசிகர்கள் உன் இசைவெள்ளத்தில் திளைத்து மெய்ம்மறக்கவேண்டும்; எங்கும் உன் புகழ் பரவ வேண்டும். இதுவே என் விருப்பம். அதை அப்படியே நிறைவேற்றுவது உன் கடமை’ என்று மழை கொட்டுவது போல் உள்ளுக்குள் எழுந்த உணர்ச் சியை அப்படியே கொட்டித் தீர்த்து விட்டார்.