பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 புல்லின் இதழ்கள்

அத்தனையையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டி ருந்த சுந்தரி அவரை நோக்கி மெல்லச் சிரித்தாள். அந்தச் சிரிப்பின் பொருள் அவருக்கு விளங்கவில்லை. அதன் காரணம் அவருக்குப் புரியவில்லை. ஆனால் அதன் வேகத்தைத் தாளமுடியாமல் அவர் மெளனியானார் சொற்களை அவளது சிரிப்பு மென்று விழுங்கி அவரை’ ஊமையாக்கியது.

“உங்களிடம் எதிர்த்துப் பேச நேர்த்துவிட்டதற்காக முதலில் நீங்கள் என்னை மன்னிக்கவேண்டும். நீங்கள் இத்தனை நேரம் பேசிய அத்தனை விஷயங்களையும் நான் அப்படியே ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான் அசட்டுத் தனமாக எந்த முடிவும் செய்யவில்லை. செய்த முடிவை இனி மாற்றிக்கொள்வதாக எனக்கு உத்தேசமும் இல்லை. என்னால் இசைக் கலைக்குப் பெருமை ஏற்படும் என்றால் அதைவிட அந்தக் கலைக்கு உங்களால் அதிகப் பயன் ஏற்படும். உலகத்தில் நல்ல சங்கீதக்தைப் பரப்ப வேண்டியது உங்கள் பணியாகவே இருக்கட்டும். நான் என்றும் தங்கள் அன்புக்கும் அபிமானத்துக்கும் பாத்திரமான ரசிகை யாகவே உங்களிடம் கற்றுக்கொண்ட வித்தையால் உங்க ளையே மகிழ்விக்கும் சேவகியாகப் பணிசெய்யவே என்னை அனுமதியுங்கள். அல்லாமல்-இருவரும்-கச்சேரிகள் செய்து நம்முடைய சங்கீதத்துக்கிடையே உயர்வு தாழ்வுகளைக் கற்பித்து, பிறர் விமர்சிக்க இடம் தரவேண்டாம். ஒருக்கால் அது நம் உறவை முறித்தாலும் முறிக்கலாம். இசையால் ஒன்றுபட்ட நாம் என்றாவது ஒருநாள் பிரிந்து வாழவும் அந்த இசையே காரணமாகக் கூடாது என்பதனாலேயே நான் தொழில் செய்வதை மறுக்கிறேன். கற்றுக்கொண்ட கலையைக் காசாக்கத்தான் வேண்டும் என்பதில்லையே! ஆயுள் முழுவதும் ஆத்மத் திருப்திக்காகவே என் இசைக் கலையை அர்ப்பித்து விட்டேன். நான் வணங்கும் உங்கள்