உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பூர்ணசந்திரோதயம்-1 அதைக் கேட்ட மிட்டாதார், 'பெண்ணே நான் என்ன மறுமொழி சொல்லப் போகிறேன்! நீதான் எனக்குச் சரியான வாக்குக் கொடுக்க வேண்டும். நீ இப்போது ஒரு பெரிய நியாயாதிபதியைப் போல இருக்கிறாய். என் விஷயத்தில் நீ எவ்விதமான தீர்மானம் சொல்லப் போகிறாயோ என்று நான் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். உன்னிடத்திலிருந்து வந்து மோதி என்னைப் பித்தனாக்கி யிருக்கும் உன்னுடைய மோகனாஸ்திரங்களினால் கட்டுண்டு தத்தளிக்கும் என்மேல் நீ பூரணமான அருள் பாலிக்க வேண்டும். நீ சொல்லப்போகும் தீர்மானம் என்னை ஒரே நொடியில் சுவர்க்க லோகத்தில் வைத்தாலும் வைக்கும்; அல்லது, ஆயுட்காலம் முடியத் தீராத நரக வேதனையில் ஆழ்த்தினாலும் ஆழ்த்திவிடும். ஆகையால், என்னை ஆக்குவதும் அழிப்பதும் உன்னுடைய கையில் இருக்கிறது. ஆகையால், நீதான் என்னுடைய தெய்வம்; உன்னுடைய காலில் விழுந்து வணங்குவது எனக்குக் கொஞ்சமும் அவமானமாகவே தோன்றவில்லை' என்றார். அவரது சொற்களைக் கேட்ட பூர்ணசந்திரோதயம் அவரைப் பார்த்து இனிமையாகவும் ஏளனமாகவும் நகைத்து, 'அன்னிய ஸ்திரீகளினிடத்தில் துராசை கொண்டி ருக்கும் புருஷர்கள் அவர்களை மயக்கி வசப்படுத்துவதற்கு இப்படித்தான் வாய் கொண்ட மட்டும், ஸ்தோத்திரமாகப் பேசுவார்களென்று நான் பல தடவைகளில் கேள்வியுற்றி ருக்கிறேன். அது சரியாக இருக்கிறது. கள் குடித்து வெறி கொண்டு பேசுகிறவனுடைய பேச்சுக்கும், மோகவெறி கொண்டு பேசுகிறவனுடைய பேச்சுக்கும், வித்தியாசமே கிடையாது. அவைகளுக்கு அர்த்தமும் கிடையாது. ஆகையால், இந்த வெறும் பேச்சுகளை எல்லாம் கேட்டுக்கொண்டிருக்க நான் தயாராக இல்லை. ஆகையால், எது காரியமோ