பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 145 அதைப் பேசும் ; அநாவசியமான வார்த்தைகளை வளர்க்க எனக்கு நேரமில்லை' என்று மிகவும் வசீகரமாகக் கூறினாள். அதைக்கேட்ட மிட்டாதார் புன்னகை செய்து, "இரட்டை சந்தோஷம். எது காரியமோ அதைத்தான் நானும் விரும் பு கிறேன். வெறும் வார்த்தைகளில் எனக்கும் அவ்வளவு பிரியமில்லை. அதுவும், காதல்நோய் கொண்டு தவித்திருக்கும் மனிதனுக்கு அதற்கு எது மருந்தோ அது கிடைத்தாலன்றி, சங்கநிதி பதுமநிதி முதலிய பெருத்த தெய்வநிதிக் குவியல்கள் கிடைப்பதானாலும் திருப்தியும் பொறுமையும் உண்டாகுமா! ஆகையால், நானும் என் மனசைமுற்றிலும் கவர்ந்துள்ள காதல் விஷயத்தைத் தவிர வேறே எதைப் பற்றியும் உன்னை வருத்தத் தயாராக இல்லை' என்று கொஞ்சலாக மொழிந்தார். அதைக் கேட்டபூர்ணசந்திரோதயம் மிகவும் நிதானமாகவும், அமர்த்தலாகவும் சலனமற்ற முகத்தோற்றத்தோடும் பேசத் தொடங்கி, 'அப்படியானால், உமக்கு என்மேல் அப்படிப்பட்ட ஆழ்ந்த காதல் உண்டாகியிருப்பது உண்மைதானா?” என்று ஏதோ ஒருவித மனவுறுதியோடு வினவினாள். உடனே மிட்டாதார் கரைகடந்த உருக்கமும் நெகிழ்வும் மோகாவேசமும் கொண்டவராகப் பேசத் தொடங்கி, தமது வலக்கரத்தைத் தமது மார்பின் மீது வைத்து மிகவும் பரிதாபகரமாகத் தோன்றி, கண்ணே நான் பிரமாண மாகச் சொல்லுகிறேன். நான் பிறந்தபிறகு இதுவரையில் வேறே எந்தப் பெண்ணினிடத்திலும் இவ்வளவு அபாரமான மோகம் ஏற்பட்டதே இல்லை. நீ என்னுடைய உயிரையே கேட்பதானாலும் நான் இந்த கூடிணத்தில் எடுத்து உன்னுடைய பாதத்தடியில் வைக்கத் தடையில்லை. அதைப் பற்றி நீ எவ்விதமான உறுதியையோ ருஜுவையோ கேட்டாலும், நான் செய்து கொடுக்கத் தடையில்லை' என்று கரைகடந்த மோகா வேசத்தோடு கூறினார். g,ē.i-11