உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 239 மடம் வந்துவிடும். இனிப் பயம் இல்லை. இதோ வந்து விட்டது என்று கூறி, அவளை அழைத்துக்கொண்டு எதிரே இருந்த ஆற்றிற்குள் இறங்கிச்சென்றார். அது பெருத்த ஆறாகத் தோன்றியது. ஆனாலும், அவர் சொன்னபடி ஒரு பக்கத்தில் முழங்கால் அளவு தெளிந்த ஜூலம் சலசலவென்ற இனிய ஒசையோடு சென்று கொண்டிருந்தது. ஆற்றின் இரண்டு பக்கங்களிலும் இருந்த படுகைகளில் நாணல், வாழை, இச்சி முதலிய மரங்கள் அடர்ந்து பெருத்த ஆரணியத்தின் தோற்றத்தை உண்டாக்கியது. ஆகையால், தான் அந்தப் பண்டாரத்தோடு நிர்மானுஷ்யமான அந்த ஆற்றிற்குள்ளிருந்தது ஷண்முகவடிவிற்கு சகிக்கமாட்டாத பரம வேதனையாக இருந்தது. ஆற்றில் ஒடிய ஜலம் அதிக ஆழமாக இருக்குமோ என்று அவள் பயந்து பின் தங்கினாள். ஆதலால், பண்டாரம் முன்னால் இறங்கி ஆழம் காட்டிக்கொண்டே போனதன்றி, தமது கையிலிருந்த மூங்கில் தடியைப் பின்பக்கத்தில் நீட்டி, அவள் அதைப் பிடித்துக்கொண்டு தொடர்ந்து வரும் படி செய்தார். குடியர்களிடத்தில் அகப்பட்டுக் கொண்டு அவஸ்தைப் பட்டதாலும், அதன்பிறகு இருளில் தனியாக வருவதாலும் ஏற்பட்ட பெரும் பீதியினால், ஷண்முகவடிவிற்கு நெஞ்சு காய்ந்து போயிருந்தமையால், அந்தப் பெண்மணி நடக்கும்போதே இரண்டொரு கை தண்ணீர் எடுத்து அருந்தித் தனது தாகவிடாயைத் தணித்துக் கொண்டவளாய்த் தனது அத்தையின் நிலைமை எப்படி இருக்கிறதோ என்றும், தான் திரும்ப வராததைக் குறித்து வேலைக்காரி எவ்வாறு கவலையுற்று வருந்துகிறாளோ என்றும் நினைத்து மனம் ஆழ்கித் தவித்தவளாய், பண்டாரத்தைத் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாள். அவ்வாறு அவர்களிருவரும் ஆற்றைக் கடந்து அக்கரை ஏறி அதற்கு அப்பாலிருந்த வயல்களின் வழியாகச் செல்லலாயினர். அங்கே தோன்றிய வயல்களில் கம்பு, சோளம் முதலிய பயிர்ச் செடிகள், ஒர் ஆள் உயரம் வளர்ந்திருந்த தாகையால், அவற்றின் இடையில் சென்ற