பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 பூர்ண சந்திரோதயம்-1 ஒற்றையடிப் பாதையில் வழியறிந்து நடப்பது மகாதுர்லபமாக இருந்தது. பண்டாரம் அந்தப் பாதையை நன்றாக அறிந்தவராதலால், அவர் அலட்சியமாக அதற்குள் நுழைந்து செல்லலானார். ஒரே வனமாகக் காணப்பட்ட அந்தக் கொல் லைக்குள் செடிகளின் இடையில் நுழைந்துசெல்ல அஞ்சிய ஷண்முகவடிவு தயங்கித் தயங்கிப் பின் தங்கிச் சென்றாள். ஆதலால், சிறிது தூரம் நடக்குமுன் வழிதவறிப் போய்விட்டது. அவள் அந்த ஒற்றையடிப் பாதையை விட்டு விலகி பயிர்ச் செடிகளிற்குள் நுழைந்து நடக்கமாட்டாமல் தத்தளிக்கிறாள். செடிகளும், கொம்புகளும், பயிர்ச்செடிகளின் உயர்ந்த தாள்களும் அவளது வழியை மறைத்துச் சேலை முதலியவற்றைப் பிடித்து இழுக்கத் தொடங்கின. அதற்குள் பத்துப் பதினைந்து தப்படிகள் முன்னால் சென்ற பண்டாரம் சடக் கென்று பின்னால் திரும் பிப் பார்த்து, 'அம்மா! ஷண்முகவடிவு வருகிறாயா?’ என்று கேட்க, அவள் வலது பக்கத்தில் நெடுந்துரத்திற்கு அப்பால் நின்று, "ஐயோ! நான் இங்கே அல்லவா இருக்கிறேன்; வழி இருக்கிற இடமே தெரியவில்லையே! என்று மிகுந்த கலவரத்தோடு கூற, அதைக் கேட்ட பண்டாரம் நிரம் பவும் விசனமுற்றவராய், 'அடாடா வழியை விட்டு எங்கேயோ போப் விட்டாயே! அப்படியே நில்; இதோ நான் வந்து உன்னை அழைத்துக் கொண்டு வந்து வழியில் சேர்க் கிறேன்' என்று அனுதாபத்தோடு கூறியவண்ணம் அவள் இருந்த இடத்தை நோக்கிச் சென்றார். ஒற்றையடிப்பாதையிலிருந்து அவள் இருந்த இடம்வரையில் பயிர்களை இரண்டு பக்கங்களிலும் வளைத்துச் சாய வைத்து வழி செய்துகொண்டே போய், தூரத்தில் நின்றபடிதமது தடிக்கம்பை நீட்டி அவளை மெதுவாக அதேவழியில் அழைத்து வந்து ஒற்றையடிப் பாதையில் விட்டு, 'பெண்ணே நான் மெல்ல மெல்லப் போகிறேன். நீ வேறே எங்கேயும் போய்விடாமல், என்பின்னாகவே தொடர்ந்து வா!' என்று மிகுந்த வாத்சல்யத்தோடும் பரிவோடும் கூற,