பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பெரியபுராண ஆராய்ச்சி 9,11ஆம் திருமுறைச் செய்திகட்கும் பெரியபுராணச் செய்திகட்கும் உள்ள வேறுபாடுகள் 1. கண்ணப்ப நாயனாரைப் பற்றிய நக்கீரர் குறிப்புக்கட்கும் கல்லாடர் குறிப்புக்கட்கும் உள்ள வேறுபாடுகள் சென்ற ப்குதியில் நன்கு காட்டப்பட்டன அல்லவா? இவற்றை நன்கு ஆராய்ந்த சேக்கிழார் சிலவற்றைத் தள்ளினார்: சிலவற்றைக் கொண்டார். அவர் தள்ளியன (1) கண்ணப்பர் நாடோறும் சிவனைப் பூசித்தமை (2) அவர் நாயுடனே காளத்தி மலைமீது இறைவன்முன் இருந்தமை (3) லிங்கத்தின் ஒரே கண்ணில் வேடர் தம் இரண்டு கண்களையும் அப்ப முயன்றமை என்பன. அவர் கொண்டவை (1) கண்ணப்பர் உடல்வளம் முதலிய பற்றிக் கூறப்பட்ட செய்தி (2) இறைவன் சிவகோசரியார் கனவிற் சென்று கூறிய செய்தி .ே லிங்கத்தின் இரண்டாம் கண்ணிற்றான் வேடர் தம் இரண்டாம் கண்ணை அப்ப முயன்றமை என்பன. 2. சம்பந்தர் பாற்போனகம் பெற்ற வரலாறு பட்டினத்தார் கூற்றிலிருந்து சென்ற பகுதியிற் காட்டப்பட்டதன்றோ? அதனை ஆராய்ந்தறிந்த சேக்கிழார், 'சம்பந்தர் பசி வருத்த அழுதார்' என்று பட்டினத்தார் கூறியதை நீரில் முழுகிய தந்தையாரைக் காணாத அச்சத்தால் அழுதார்' என்று மாற்றி அமைத்தார். 3. ஒன்பதாம் திருமுறையில் நம்பி காடநம்பி என்பார், சுந்தரரும் சேரமானும் வெள்ளானைமீது இவ்வுடலோடு சென்றனர்' என்று தெளிவாகக் கூறியுளர். ஆயின், நம்பி, சுந்தரர் வெள்ளானைமீதும் சேரமான் யானைமீதும் சென்றனர் என மூன்று இடங்களில் தெளிவாகக் கூறியுள்ளார். காடநம்பி சேக்கிழார்க்கும் பிற்பட்டவராகக் கோடலே தக்கது என நாம் நான்காம் பிரிவிற் கூறியிருப்பினும், அவர் கூறிய செய்திக்கேற்பத் தாராபுரத்துக் கோவில் சிற்பமும் இருத்தலைக் காண, சேக்கிழார் காலத்தில் இந்தக் கொள்கையும் நாட்டில் இருந்திருக்கலாம் என்று கோடல் தவறாகாது. அங்ங்னம் இருந்திருப்பின், சேக்கிழார், இரு கூற்றுக்களின் வன்மை மென்மைகளை ஆய்ந்து, நம்பி கூற்றையே பின்பற்றினார் என்று கோடல் தகும். இங்ங்ணம், முன்னோர் தந்த குறிப்புக்களை ஆராய்ந்து கொள்ளத் தக்கவற்றைக் கொண்டு, தள்ளத்தக்கவற்றைத் தள்ளிப் புராணம் பாடினமை முன்சொன்ன மூவகை வேறுபாடுகட்கு ஒரு காரணம் ஆகும். மற்றொரு காரணம்: தேவார காலத்திற்கும் நம்பிக்கும் இடைப்பட்ட காலத்திலும் நம்பிக்கும் சேக்கிழார்க்கும் இடைப்பட்ட காலத்திலும் பல கதைகள் பொது மக்களிடையே வளர்ந்திருக்கலாம். வரலாற்றுப் புகழ்பெற்ற கோச்செங்கணானுக்குப் பிறகு உண்டான அவனைப் பற்றிய சிலந்திக்